மகளிர் அதிகார மையத்தில் காலிப்பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Follow Us

மகளிர் அதிகார மையத்தில் காலிப்பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

                                                                                           


தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பாலின நிபுணர்-1, தரவுப்பதிவாளர் - மிஷன் சக்தி திட்டம்-1 மற்றும் தரவுப்பதிவாளர் - பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா-1 ஆகிய 3 காலிப்பணியிடங்கள் பின்வரும் தகுதிகளின் அடிப்படையில் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாலின நிபுணர்-1


தகுதி: சமூக அறிவியல், சமூகவியல்/இதர சமூகப்பணிகள் தொடர்பான துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பாலினத்தை மையமாகக் கொண்டு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.21,000/- வழங்கப்படும்.


தரவுப்பதிவாளர் - மிஷன் சக்தி திட்டம்-1 மற்றும் தரவுப்பதிவாளர் - பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா-1 - தகுதி: கணிணி / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சாரா தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் மாநில அல்லது மாவட்ட அளவில் தரவு மேலாண்மை, செயல்முறை ஆவணங்கள் மற்றும் இணையதள அடிப்படையிலான செயல்பாடுகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.20,000/- வழங்கப்படும்.

எனவே, விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடி மாவட்ட www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து மேற்காணும் தகுதிகளுடன் கூடிய கல்விச்சான்று, பணி முன் அனுபவச்சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று போன்ற ஆவண நகல்களுடன் இணைத்து விண்ணப்பத்தினை 15.07.2025-க்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628101 என்ற அலுவலக முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு தொலைபேசி எண்: 0461-2325606 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments