சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் பணி - 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

Follow Us

சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் பணி - 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

 சென்னை பெருநகர ஊர்க் காவல் படையில் , மண்டல தளபதி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை பெருநகர ஊர்க்காவல் படை அலுவலகம் தெரிவித்துள்ளது.

                                                                                        


பதவிகளுக்கு இளமையும் , ஊக்கமும் அர்ப்பணிப்பு மற்றும் தலைமை பண்புடைய விரிவுரையாளர்கள் , ஆசிரியர்கள் , உயர் பதவி வகிப்பவர்கள், சுயதொழில் புரிபவர்கள் , உயர்தகுதி வாய்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் பொது நலத் தொண்டில் ஈடுபாடு கொண்ட சேவை செய்ய விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இப்பணியானது கௌரவ பதவியாகும் (Honorary post) மேலும் இப்பணிக்கு எவ்வித ஊக்கத் தொகையும் வழங்கப் படமாட்டாது. கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தகுதிகள் என்னென்ன ?


1. குற்றப் பின்னனி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


2. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.


3. குடும்ப அட்டை (Ration Card) வைத்திருக்க வேண்டும்.


4. 01.07.2025 அன்று 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாகவும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பம் கடிதத்துடன், சுயவிபரங்கள் அடங்கி (Curriculum Vitae) படிவத்தை இணைத்து கீழ்காணும் முகவரிக்கு 30.07.2025 மாலை 05 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது addlcophqrs4@gmail.com எனும் e-mail முகவரியிலும் அனுப்பலாம்.


தபால் அனுப்ப வேண்டி முகவரி


சென்னை பெருநகர ஊர்காவல்படை அலுவலகம் , சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம் , சைதாப்பேட்டை, சென்னை - 15


தொலைபேசி எண்: 95667 76222


பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவரை கடத்தி மிரட்டிய 2 நபர்கள் கைது


சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த காண்டீபன் ( வயது 38 ) என்பவர் தரமணியில் மல்லிகா ஏஜென்சி என்ற பெயரில் எம் சாண்ட் , ஜல்லி சில்லறை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திரிசூலம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் மோசஸ் என்பவர் மண் மற்றும் ஜல்லி சப்ளை செய்து வந்துள்ளார். காண்டீபன் வியாபாரத் தொகை ரூ.32 ஆயிரம் ரஞ்சித் மோசஸ்க்கு பாக்கி வைத்து திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 26.06.25 அன்று காண்டீபன், ரஞ்சித் மோசஸை தொடர்பு கொண்டு மேலும் ஒரு லோடு எம் சாண்ட், ஒரு லோடு ஜல்லி ஆகியவை வேண்டும் என்றும் உடனடியாக அதற்குரிய பணம் 29,150/- ரூபாய் பணத்தை தந்து விடுவதாக கூறியதால் , ரஞ்சித் மோசஸ் இரவு 9.00 மணியளவில் பல்லாவரத்தில் இருந்து அவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் பொருட்களை ஏற்றிக் கொண்டு தரமணியில் இறக்கி விட்டு திரும்பி செல்லும் போது , சுமார் 11.30 மணி அளவில் திருவான்மியூர் , அவ்வை நகர் சந்திப்பில் காண்டீபனிடம் பழைய பாக்கி பணம் ரூ.32,000/-தை கேட்டுள்ளனர்.


கொலை செய்து விடுவதாக மிரட்டல்


மேலும் அவரை லாரியில் கட்டாயப்படுத்தி ஏற்றி கடத்தி சென்று திரிசூலத்தில் உள்ள ஜல்லி உடைக்கும் இடத்தில் வைத்து ரஞ்சித் மோசஸ் அவரது நண்பருடன் சேர்ந்து காண்டீபன் வைத்திருந்த பணம் ரூபாய் 32,000/-பறித்துள்ளனர். மேலும் தற்போது இறக்கிய லோடிற்கான பணம் ரூ.29,150/- ரூபாய் பணத்தை சீக்கிரம் தரும்படியும் இல்லையெனில் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.


இது குறித்து காண்டீபன் கொடுத்த புகாரின் பேரில் J-6 திருவான்மியூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ‘

J-6 திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட திரிசூலம் பகுதியை சேர்ந்த 1.ரஞ்சித் மோசஸ் ( வயது 30 ) மற்றும் 2.அரிஷ்மோகன்ராஜ், ( வயது 22 ) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.1,200/- மற்றும் கடத்தல் சம்பவத்திற்கு பயன்படுத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments