தமிழக அரசு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில், ரேஷன் கடைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளவர்கள், தங்களின் இல்லங்களிலேயே அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பெற்று பயன் பெறலாம். பொதுவாக தமிழகத்தில் உள்ள 2.25 கோடியே 25 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி உள்ளிட்ட முக்கிய அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்கள், நேரடியாக ரேஷன் கடைக்கு சென்று கைரேகை பதிவு செய்து பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இந்த நடைமுறை, வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நடக்க முடியாத அளவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒரு புதிய முயற்சியாக வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை சோதனை ரீதியில் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டம் இன்று ஜூலை 1 முதல் 5 ஆம் தேதி வரை, பத்து மாவட்டங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதில், சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகப்பட்டினம், நீலகிரி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சோதனை திட்டத்தின் மூலம், பயனாளிகள் வீட்டிலிருந்தபடியே தேவையான பொருட்களைப் பெற முடியும். இது அவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், அதை தமிழகமெங்கும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
சோதனை மாவட்டங்கள்:
சென்னை
திருநெல்வேலி
சிவகங்கை
திண்டுக்கல்
ராணிப்பேட்டை
ஈரோடு
தர்மபுரி
நாகப்பட்டினம்
நீலகிரி
கடலூர்
திட்டத்தின் நோக்கம்
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ரேஷன் கடைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் சார்பில் மற்றவர் மூலம் ரேஷன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த பிரச்சனைக்கு தீர்வாக, அவர்களுக்கு வீட்டில் நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இந்த சோதனைத் திட்டத்தின் போது, தகுதி பெற்ற பயனாளிகளின் வீடுகளுக்கு அரசின் உரிய நியாயவிலைக் கடை ஊழியர்கள் அல்லது அதிகாரப்பூர்வ பிரையவேட் ஏஜென்சிகள் வந்து, அவசியமான உணவுப் பொருட்களை வழங்குவர். இதில் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இடம் பெறும்.
இந்த முயற்சி, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமன்றி, சமூகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஒரு மாதிரித் திட்டமாக அமையக்கூடும். சோதனை திட்டம் வெற்றிகரமாக அமையுமானால், இதனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த திட்டத்தின் வாயிலாக, தமிழக அரசு நியாயவிலைக் கடை சேவையை மொபைல் சேவையாக மாற்ற, மேலும் மாடர்ன் டிஜிட்டல் நுட்பங்களை கொண்டு வர திட்டமிடுகிறது. ரேஷன் சேவையை அனைவருக்கும் எளிமையாக, சமமாக கொண்டு சேர்க்கும் இந்த திட்டம், தமிழகத்தில் சமூகநீதி மற்றும் உரிமை அடிப்படையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
0 Comments