மாதம் ரூ.9,250 லாபம் தரும் அசத்தலான போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. அத பத்தி தெரியுமா..?

Follow Us

மாதம் ரூ.9,250 லாபம் தரும் அசத்தலான போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. அத பத்தி தெரியுமா..?

 இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வங்கிகளுக்கு இணையாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் வங்கியை விட சிறந்த லாபத்தை அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் கொடுக்கிறது. சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி தொகை கிடைப்பதால் முதிர்வு காலத்தில் சேமிப்புடன் சேர்த்து கூடுதல் வட்டித்தொகையும் கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது. ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் நல்ல பலனை அளிக்கிறது.

                                                                          


அஞ்சலக சேமிப்பு திட்டம் ஒன்றில் மக்கள் இணைவதன் மூலம் மாதம் குறைந்தபட்சம் ரூ.5,550 முதல் அதிகபட்சமாக ரூ.9,250 வரை பெற முடியும். இந்த பயன் கிடைக்க வேண்டும் என்றால் மக்கள் பிஓஎம்ஐஎஸ் எனும் தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டத்தில் (Post Office Montly Income Scheme or POMIS) இணைய வேண்டும். இது 5 ஆண்டு சேமிப்பு திட்டமாகும்.


இந்த திட்டத்தை பொறுத்தமட்டில் சிங்கிள் அக்கவுண்ட் மற்றும் ஜாயிண்ட் அக்கவுண்ட் என்ற 2 வகைகள் உள்ளன. ஜாயிண்ட் அக்கவுண்ட் முறையில் அதிகபட்சமாக 3 பேர் இணைய முடியும். சிங்கிள் அக்கவுண்ட் திட்டம் என்றால் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையும், ஜாயிண்ட் அக்கவுண்ட் திட்டம் என்றால் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் 5 ஆண்டுகளில் நாம் முதலீடு செய்து சேமிக்கலாம்.


இந்த சேமிப்பு திட்டத்துக்கு தற்போது 7.4 சதவீதம் ஆண்டு வட்டியை அரசு வழங்கி வருகிறது. இந்த வட்டித்தொகையை 5 ஆண்டுக்கு பிறகு பயனாளர்கள் ஒவ்வொரு மாதமும் பெற முடியும். அதன்படி ஜாயிண்ட் அக்கவுண்ட்டில் ஒருவர் 5 ஆண்டில் ரூ.15 லட்சத்தை சேமித்தால் செய்தால் அவருக்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு ரூ.1.11 லட்சம் வட்டியாக கிடைக்கும்.


இதனை 12 மாதங்களுக்கு பிரித்து பார்த்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 கிடைக்கும். இதனை அவர்கள் மாதந்தோறும் எடுத்து கொள்ள முடியும். மாறாக சிங்கிள் அக்கவுண்ட் முறையில் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ.66,600 வட்டியாக கிடைக்கும். அதன்படி பார்த்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.5,550யை பெற முடியும்.


ஒருவேளை இந்த வட்டித்தொகையை மாதந்தோறும் நாம் எடுக்காத பட்சத்தில் அது அசல் தொகையுடன் சேரும். அதுமட்டுமின்றி அசல் தொகையுடன் சேரும் வட்டி தொகைக்கும் கூட வட்டி கிடைக்கும். இதனால் இந்த திட்டம் என்பது மக்களுக்கு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments