ஒரே நாளில் இரண்டு முக்கியத் தேர்வுகள்! ஒரு தேர்வை தேதி மாற்றம் செய்த ஆசிரியர் தேர்வு வாரியம்!

Follow Us

ஒரே நாளில் இரண்டு முக்கியத் தேர்வுகள்! ஒரு தேர்வை தேதி மாற்றம் செய்த ஆசிரியர் தேர்வு வாரியம்!

 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த தேர்வுகள் வரும் செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் டிஎன்பிஎஸ்சி குழு 2 மற்றும் 2ஏ தேர்வும் நடைபெற உள்ளது.

                                                                              


இதனால் ஒரே நாளில் இரண்டு முக்கியத் தேர்வுகள் நடைபெறுவதால், தேர்வர்கள் சந்திக்கக்கூடிய சிரமங்களை கருத்தில் கொண்டு, ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய முடிவெடுத்துள்ளது.


இதன் அடிப்படையில், முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு தேதி அக்டோபர் 12ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிய தேர்வு தேதியை தேர்வர்கள் நினைவில் கொண்டு, தயாரிப்பை சீரமைத்து தொடரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments