மாதம் ரூ. 85 ஆயிரம் சம்பளத்தில் வங்கியில் வேலை வேண்டுமா..?

Follow Us

மாதம் ரூ. 85 ஆயிரம் சம்பளத்தில் வங்கியில் வேலை வேண்டுமா..?

தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின்(நபார்டு) லக்னௌ கிளையில் காலியாக உள்ள கூட்டுறவு மேம்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

                                                                    


இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Cooperative Development Officers (CDO)


காலியிடங்கள்: 5


சம்பளம்: மாதம் ரூ.65,500 - ரூ.85,000


தகுதி: வணிகவியல், பொருளாதாரம், மேலாண்மை, விவசாயம், கணினி போன்ற ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட பிரிவில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: 1.1.2025 தேதியின்படி 50 முதல் 62-க்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் https://birdlucknow.nabard.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டும்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.590. கட்டணத்தை ஆன்லைன்மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட் டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Banker Institute of Rural Development, Sector H, LDA Colony, Kanpur Road, Lucknow - 226 012.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 12.7.2025


மேலும் விபரங்களுக்கு recruitment.bird@ nabard.org என்ற மின்னஞ்சல் அல்லது https://birdlucknow.nabard.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Post a Comment

0 Comments