எய்ம்ஸ்-ல் வேலை.. 3,496 காலிப்பணியிடங்கள்.. 10, 12 ஆம் வகுப்பு முடிச்சவங்களும் அப்ளை பண்ணலாம்! ரெடியா

Follow Us

எய்ம்ஸ்-ல் வேலை.. 3,496 காலிப்பணியிடங்கள்.. 10, 12 ஆம் வகுப்பு முடிச்சவங்களும் அப்ளை பண்ணலாம்! ரெடியா

 எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

                                                                              


மொத்தம் 3,496 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிர்வாக அதிகாரி, அலுவலக உதவியாளர், கிளார்க், அசிஸ்டென்ட் இன்ஜினியர், எலக்ட்ரீசியன், மெக்கானிக், நுாலக உதவியாளர், பிசியோ தெரபிஸ்ட் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அமைந்துள்ளது. டெல்லி, பாட்னா உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் அமைந்து இருக்க கூடிய எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3,496 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.


பொது ஆட்சேர்ப்பு தேர்வு:


எய்ம்ஸ் மருத்துவ நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு தேர்வு நடைபெறுகிறது. ஆட்சேர்ப்பு மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் மருத்துவ நிறுவனங்களில் காலியாக இருக்க கூடிய பணியிடங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனத்தெரிகிறது.


1. எய்ம்ஸ் பதிண்டா


2. எய்ம்ஸ் போபால்


3. எய்ம்ஸ் போபால்


4. எய்ம்ஸ் தியோகர்


5. எய்ம்ஸ் கோரக்பூர்


6. எய்ம்ஸ் ஜம்மு


7. எய்ம்ஸ் ஜோத்பூர்


8. AIIMS மங்களகிரி வேலை வாய்ப்புகள்


9. எய்ம்ஸ் நாக்பூர்


10. எய்ம்ஸ் பாட்னா


11. எய்ம்ஸ் ரேபரேலி


12. AIIMS ராய்ப்பூர்


13. எய்ம்ஸ் ராஜ்கோட்


14. எய்ம்ஸ் ரிஷிகேஷ்


15. பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC), புது தில்லி


16. ஜிப்மர், புதுச்சேரி


17. LHMC, டெல்லி


18. RIMS, இம்பால்


19. ரிபான்ஸ், ஐஸ்வால்


ஆகிய மருத்துவ நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக பொது ஆட்சேர்ப்பு தேர்வு நடைபெறுகிறது.

கல்வி தகுதி:


நிர்வாக அதிகாரி, அலுவலக உதவியாளர், கிளார்க், அசிஸ்டென்ட் இன்ஜினியர், எலக்ட்ரீசியன், கேஸ்/பம்ப் மெக்கானிக், ஓ.டி., அசிஸ்டென்ட், பார்மசிஸ்ட், கேஷியர், மெக்கானிக், நுாலக உதவியாளர், பிசியோ தெரபிஸ்ட் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 3,496 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


பணியிடங்களின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபாடும். நிர்வாக பணிகள் மருத்துவம் சார்ந்த பணிகள் என பல்வேறு வகையான பணியிடங்கள் உள்ளன. பொதுவான கல்வி தகுதியாக பார்த்தால் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்ட படிப்பு முடித்தவர்களுக்கான பணியிடங்களும் உள்ளன.

ANM, B.E/B.Tech, BPT, M.Sc, MCA, D.Pharm, DMLT, BMLT போன்ற கல்வி தகுதி கொண்டவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 50 க்கும் அதிகமான பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன. தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் கல்வி தகுதி, பணியிடங்கள் பற்றிய முழுமையான விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


வயது வரம்பு:


18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு (Gen/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.


தேர்வு மூறை:

கணிணி வழியிலான தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை அடிப்படையின் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ. 3,000 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.2,400 கட்டணம் ஆகும். ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.


கணிணி வழி தேர்வை பொறுத்தவரை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும் . விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத விரும்பும் நகரங்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க வரும் 31.07.2025 கடைசி நாளாகும். https://rrp.aiimsexams.ac.in/ கூடுதல் விவரங்களை இந்த இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments