தமிழக அரசு பொதுமக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மிகவும் நலிந்த நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த, பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழக அரசு "அன்பு கரங்கள்" என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், தகுதியான குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது குழந்தைகளின் கல்வி இடைநிற்றலைத் தடுத்து, கல்லூரிப் படிப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கும் உதவுகிறது. தமிழக அரசு பெண்கள், மாணவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்கள் என பல்வேறு தரப்பினரின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், சமூகத்தின் மிகவும் பாதிக்கப்பட்ட பிரிவினரான ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றும் ஒரு முக்கிய முயற்சியாக "அன்பு கரங்கள்" திட்டம் பார்க்கப்படுகிறது. பெற்றோரின் அரவணைப்பை இழந்து, உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளின் கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகளை உறுதி செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.
திட்டத்தின் முக்கிய அம்சம்!
ஆதரவு கரங்கள் திட்டத்தின் முக்கிய நோக்கம், பெற்றோரை இழந்த குழந்தைகள் வறுமை காரணமாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிடுவதைத் தடுப்பதாகும். மாதம் ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம், அவர்கள் தங்கள் கல்வியை தடையின்றி தொடர அரசு ஊக்குவிக்கிறது. மேலும், பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் வகையில் கல்லூரி கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது..
யார் யார் பயன் பெறலாம்?
- தாய் மற்றும் தந்தை என இருவரையும் இழந்த குழந்தைகள்.
- பெற்றோரில் ஒருவர் இறந்துவிட, உயிருடன் இருக்கும் மற்றொரு பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள்.
- பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது மாற்றுத்திறனாளியாகவோ இருத்தல்.
- பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் இருத்தல்.
- பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டிருத்தல்.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்
- குடும்ப அட்டை
- குழந்தையின் ஆதார் அட்டை
- குழந்தையின் வயது சான்றிதழ் (பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ்)
- குழந்தையின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுடைய குழந்தைகள் அல்லது அவர்களின் பாதுகாவலர்கள் இந்த திட்டத்தில் சேர இரண்டு வழிகளில் விண்ணப்பிக்கலாம். உங்கள் மாவட்டத்தில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு குறைதீர் முகாம்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை அளிக்கலாம். மேலும் உங்கள் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அணுகி, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். இந்த திட்டம், பெற்றோரை இழந்து நிற்கும் எண்ணற்ற குழந்தைகளின் வாழ்வில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது. தகுதியானவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதிசெய்யுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
.jpeg)
0 Comments