மத்திய அரசீன் கீழ் செயல்படும் இந்திய ரிஜிஸ்டார் ஜெனரல் (RGI) அமைப்பு, நாட்டில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறக்கும் குழந்தைகளுக்கு, பிரசவத்திற்கு பின்பு மருத்துவமனையில் இருந்து வெளியேறுவதற்கு முன் பெற்றோர்-களுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு, ஜூன் 12, 2025 அன்று வெளியிடப்பட்டது.இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட குழந்தை பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுவதால், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ், கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் திருமண பதிவு போன்றவற்றுக்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழ் கருதும் சட்டம் 2023 முதல் அமலில் உள்ளது.ஆர்ஜிஐ அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, குழந்தை பிறப்பு பதிவு செய்யப்பட்ட உடன், ஏழு நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழை தாய்மார்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த சான்றிதழ், எலக்ட்ரானிக் அல்லது பிற வடிவங்களில் வழங்க அனுமதி அளித்து. ஆனால் ஏதேனும் ஒரு வகையில் வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது உத்தரவு."இந்தியாவில் தற்போது பிறப்பு சான்றிதழின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரசவத்திற்கு பிறகு உடனடியாக வழங்குவது அவசியம்," என ஆர்ஜிஐயின் உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனைகள், சமுதாய சுகாதார மையங்கள், மற்றும் முதன்மை சுகாதார மையங்களில் பிறக்கும் வேளையில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுவதை சீர்படுத்துவது முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.டிஜிட்டல் பிறப்பு சான்றிதழின் முக்கியத்துவம்: 2023 அக்டோபர் 1 முதல், டிஜிட்டல் பிறப்பு சான்றிதழை கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, அரசு வேலைகள், திருமண பதிவு, மற்றும் பிற சேவைகளுக்கு ஒரே ஆவணமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ், மக்களுக்கு அரசு மற்றும் தனியார் சேவைகளை எளிதாக பெற உதவுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளுக்கு ஏற்ப, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
0 Comments