நான் முதல்வன் இணையதளத்தில் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளுவம் வகையில், பாடத்திட்டங்கள், காணொணி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதை தேர்வர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் செல்லப்பிள்ளைத் திட்டம் என அழைக்கப்படும் நான் முதல்வன் திட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின்மூலம் இணைஞர் சமுதாயத்தினர் உயர்கல்வி பெற வழிகாட்டுவது மட்டுமின்றி, மாநில, தேசிய மற்றும் தனியார்துறை தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், முக்கிய பயிற்சிகளுக்கு இலவச தங்குமிட வசதிகளும் செய்யப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
மாணவ மாணவிகள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் லாபகரமான வேலைகளைப் பெறுவதற்கு இந்த திட்டம் பேருதிவியாக உள்ளது. இந்த திட்டத்தின் பயனாக லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள், இளைஞிகள் பணி வாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை பெற்றுள்ளனர்,
இந்தநிலையில், TNPSC, SSC, UPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு தமிழ்நாடு சிறப்பு ஏற்பாடு ஒன்றை மேற்கொண்டு உள்ளது. அதன்படி, போட்டித் தேர்வுக்களுக்கான ஒரு தனித்துவமான வலைதளம் ஒன்றை தமிழ்நாடு அரசு (Tamilnadu Government) தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ள மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் ஒரு கோடி பேர் இதுவரை பயனடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், TNPSC, SSC, IBPS, RRB, UPSC போன்ற தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் இந்த வலைதளம் மூலம் பயனடையலாம். மேலும், TNPSC, SSC, IBPS, RRB, UPSC போன்ற தேர்வுகளுக்கான பாடத்திட்டம், மென்பாடக்குறிப்புகள், காணொளி வகுப்புகள், ஒலிப்பாடக்குறிப்புகள், தமிழிலும் ஆங்கிலத்திலும் தினசரி நடப்பு நிகழ்வுகள், Mindmap உள்ளிட்டவை இந்த வலைதளத்தில் கிடைக்கும்.
மேலும், இவை அனைத்தையும் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவற்றை இலவசமாக பதிவிறக்கி தேர்வுகளுக்கு தயாராகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
1 Comments
Please share website link
ReplyDelete