விடுபட்ட மகளிருக்கு உரிமை தொகை. உதயநிதி குட் நியூஸ்!

 மாநில, மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஜூன் 11) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விருது வழங்கினார்.

                                                                               


இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், "விடுபட்ட மகளிருக்கு எப்போது மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். விடுபட்டவர்களுக்கு நிச்சயமாக மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்" என்று தெரிவித்தார். Udhayanidhi says magalir urimai fund will distribute


கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக கூடுதல் பயனாளர்கள் இணைக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூன் 4-ஆம் தேதி தமிழகம் முழுவதும் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post