விடுபட்ட மகளிருக்கு ஆகஸ்ட் முதல் உரிமைத் தொகை... முதல்வர் அறிவிப்பு!

Follow Us

விடுபட்ட மகளிருக்கு ஆகஸ்ட் முதல் உரிமைத் தொகை... முதல்வர் அறிவிப்பு!

 முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

                                                                          


அதில் "தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை.

பொருளாதார வளர்ச்சியில் 9.69% உடன் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு புதிய உச்சம் பெற்று இருப்பதாக மத்திய அரசே கூறியுள்ளது தமிழ்நாடில் மகளிர் உரிமை, புதுமை பெண், காலை உணவு, விவசாயிகள் பயிர் காப்பீடு, இலவச மின் இணைப்பு உட்பட பல திட்டங்களைப் பார்த்து எடப்பாடி பழனிசாமி புலம்பி தள்ளுகிறார்.

தகவலை முழுதாக அறியாமல் அரைவேக்காட்டு தனமாக அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார். ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படும். அந்த முகாமில் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட மகளிர் விண்ணப்பித்து பயனடையலாம். மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியான பெண்களுக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் ரூ.1,000 வழங்கப்படும்." என பேசியுள்ளார்.

Post a Comment

0 Comments