அரியலூர் மாவட்டத்தில் உள்ளவரா நீங்கள்? சட்டத்துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எழுத்துத் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் 17 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழுவின் கீழ் இயங்கும் Legal Aid Defense Counsel System அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் | 1 |
டெபியூட்டி தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் | 3 |
உதவி ஆலோசகர் | 6 |
அலுவலக உதவியாளர்/ கிளார்க் | 3 |
டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் | 1 |
அலுவலக ப்யூன் | 3 |
மொத்தம் | 17 |
வயது வரம்பு
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அறிவிப்பின் தேதியின்படி, 21 வயதிற்கு குறைவாக இருக்கக்கூடாது. விண்ணப்பதார்கள் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
- தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு சட்டம் படித்து 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பேசும், எழுதும் திறன் அவசியம். குற்ற வழக்கில் அனுபவம் அவசியம். கணினி உபயோகிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- டெபியூட்டி தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு சட்டப்படிப்பு முடித்து 7 ஆண்டுகள் அனுபவம் தேவை.
- உதவி ஆலோசகர் பதவிக்கு குற்றவியல் சட்டத்தில் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.
- அலுவலக உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், கணினி உபயோகம், தட்டச்சு ஆகியவை தெரிந்திருக்க வேண்டும்.
- டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு, எழுத்து திறன், தட்டச்சு திறன் அவசியம்.
- அலுவலக ப்யூன் பதவிக்கு 8-ம் வகுப்பு தெரெச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
- தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை வழங்கப்படும்.
- டெபியூட்டி தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.
- உதவி ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும்.
- அலுவலக உதவியாளர்/ கிளார்க் பதவிக்கு மாதம் ரூ.12,500 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும்
- டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு மாதம் ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும்.
- அலுவலக ப்யூன் பதவிக்கு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்கள் இரண்டு வருடத்திற்கு ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. விண்ணப்பதார்களின் கல்வித்தகுதி, அனுபவம், திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ariyalur.dcourts.gov.in/ என்ற அரியலூர் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதனுடன் 2 புகைப்படங்கள் இணைத்து கவ்லித்தகுதிக்கான சான்றிதழ்கள், அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் நபர்களிருந்து தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். நேர்காணலில் அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
Chairman/ Principal District Judge,
District Legal Services Authority,
Combined Court Campus,
Ariyalur - 621 704.
முக்கிய நாட்கள்
விவரம் | தேதிகள் |
விண்ணப்பப்பிக்க கடைசி நாள் | 14.07.2025 மாலை 5.30 மணி |
நேர்காணல் | பின்னர் அறிவிக்கப்படும் |
இப்பணியிடங்களுக்கு மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஜூலை 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஆட்சேர்ப்பு சம்மந்தமான அனைத்து தகவல்களும் அரியலூர் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் மட்டும் வெளியிடப்படும்.
0 Comments