நாமக்கல் மாவட்டத்தில் அரசு துறையில் வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கம் பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் ஜூலை 4-ம் தேதி வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு உடனே விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்
விவரம் | காலிப்பணியிடங்கள் |
ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சையாளர் | 1 |
சிகிச்சை உதவியாளர் | 1 |
இடைநிலை சுகாதாரப் பணியாளர் - மக்களை தேடி மருத்துவம் | 23 |
பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர் நிலை II | 12 |
மொத்தம் | 37 |
வயது வரம்பு
- ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சையாளர், பல்நோக்கு சுகாதார பணியாளர் பதவிக்கு அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம்.
- சிகிச்சை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 59 வயது வரை இருக்கலாம்.
- இடைநிலை சுகாதாரப் பணியாளர் பதவிக்கு 01.01.2025 தேதியின்படி, 50 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி
- ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சையாளர் பதவிக்கு பேச்சு மற்றும் மொழி நோயியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- சிகிச்சை உதவியாளர் பதவிக்கு டிப்ளமோ நர்சிங் தெரபிஸ்ட் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- இடைநிலை சுகாதாரப் பணியாளர் பதவிக்கு செவிலியர் பட்டயப் படிப்பு அலல்து இளங்கலை செவிலியர் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- பல்நோக்கு சுகாதார பணியாளர் பதவிக்கு உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியை ஒரு பாடமாக கொண்டு படித்திருக்க வேண்டும். பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட காந்தி கிராம கிராமப்புற நிறுவனப் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனத்தில் 2 ஆண்டு பாடப் பயிற்சியில் தேர்ச்ச் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
- ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சையாளர் பதவிக்கு மாதம் ரூ.23,000 வழங்கப்படும்.
- சிகிச்சை உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.13,000 வழங்கப்படும்.
- இடைநிலை சுகாதாரப் பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.
- பல்நோக்கு சுகாதார பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.14,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் நிரப்பப்படுவதால், தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் நிரப்பப்படுவார்கள். விண்ணப்பதார்களின் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என கருதப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://namakkal.nic.in/ என்ற நாமக்கல் மாவட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தகுந்த ஆவணங்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணையக்க வேண்டிய ஆவணங்கள்
- பிறப்பு சான்றிதழ் (இல்லையென்றால் பிறந்த தேதி குறிப்பிட்ட மதிப்பெண் சான்றிதழ்)
- 10,12, டிப்ளமோ, பட்டப்படிப்பு உள்ளிட்ட கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள், மதிப்பெண்ண்கள் பட்டியல் ஆகியவை
- வீட்டு முகவரிக்கு ஆதார்/வாக்காளர்/ குடும்ப அட்டை
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சுகாதார அலுவலர்/ நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நாமக்கல் மாவட்டம் - 637003.
04286-281424.
முக்கிய நாட்கள்
விவரம் | தேதிகள் |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 04.07.2025 மாலை 5 மணி வரை |
நேர்காணல் | பின்னர் அறிவிக்கப்படும் |
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஜூலை 40-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments