UAN என்றால் என்ன?: UAN என்பது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் அதன் ஊழியருக்கு வழங்கப்படும் 12 இலக்கப் பிரத்தியேக எண்.
இது ஊழியர்களின் வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு முதலாளிகளிடமிருந்து பிஎஃப் கணக்குகளை நிர்வகிக்கும் நம்பராக செயல்படுகிறது.
UAN என்பது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் என்பதாகும். இந்த யுஏஎன் நம்பரை வைத்து தான் ஒரு ஊழியர் வெவ்வேறு நிறுவனங்களில் உள்ள வெவ்வேறு இபிஎப் கணக்குகளை ஒருங்கிணைக்க முடியும். இந்த ஒரு நம்பரை வைத்து பிஎஃப் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது? ஊழியரின் பங்களிப்பு, முதலாளியின் பங்களிப்பு போன்ற விஷயங்களை ஆன்லைன் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.
நம்பரை இணைப்பதற்குமான கடைசி தேதி 2025 ஆம் ஆண்டின் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் மே 30ஆம் தேதி அன்று EPFO அமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கையில், UAN நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கும், வங்கி கணக்கில் ஆதார் நம்பரை இணைப்பதற்கு ஜூன் 30, 2025 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
ஆதாரைப் பயன்படுத்தி UAN-ஐ எவ்வாறு ஆக்டிவேட் செய்வது?
ஸ்டெப் 1: முதலில் EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: "இம்பார்ட்டெண்ட் லிங்ஸ்" என்ற செக்சனுக்கு கீழ் "ஆக்டிவேட் UAN" என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: உங்களுடைய UAN நம்பர், ஆதார் நம்பர், பெயர், பிறந்த தேதி, ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் ஆகியவற்றை வழங்கவும். உங்களுடைய மொபைல் நம்பரை வழங்கி OTP பெறவும்.
ஸ்டெப் 4: அதன் பிறகு "கெட் ஆதரிசேஷன் பின்" என்பதை கிளிக் செய்யவும். உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். OTP-ஐ வழங்கி செயல்முறையை முடிக்கவும்.
யுஏஎன் நம்பரை ஆக்டிவேட் செய்த பிறகு உங்களுக்கு ஒரு பாஸ்வேர்ட் அனுப்பப்படும். ஊழியர்கள் தங்கள் PF கணக்குகளை நிர்வகித்தல், பிஎப் பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்தல், பணம் திரும்பப் பெறுதல் அல்லது பிற பரிமாற்றங்களுக்கு யுஏஎன் நம்பரைப் பயன்படுத்தலாம்.
0 Comments