ரூ.1 லட்சம் வரை சம்பளம் மத்திய அரசு வேலை; பொறியாளர்களுக்கு வாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இதோ

 தேசிய அனல் மின் கழகத்தில் (NTPC) உள்ள பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் பணியிடங்களில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான் சிறப்பு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொறியாளர் பதவிக்கு 8 பணியிடங்கள், உதவி பொறியாளர் பதவிக்கு 1 பணியிடம், உதவி மேலாளர் பதவிக்கு 17 பணியிடங்கள் மற்றும் உதவி கெமிஸ்ட் பதவிக்கு 1 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

                                                                               


ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பிக்கலாம். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தகுதிகள் என்ன உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.


பணியின் விவரங்கள்


பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்

பொறியாளர் 8

உதவி பொறியாளர் 1

உதவி மேனேஜர் 16

உதவி கெமிஸ்ட் 1

மொத்தம் 26

இதில் எஸ்சி பிரிவில் - 11, எஸ்டி பிரிவில், எஸ்டி பிரிவில் - 14 காலிப்பணியிடங்கள் உள்ளன.



பொறியாளர் பதவி - ஆப்ரேஷன், எலெக்ட்ரிக்கல் எரிக்கஷன், மெக்கானிக்கல் எரிக்கஷன், சிவில் என நிரப்பப்படுகிறது.

உதவி பொறியாளர்/ உதவி மேலாளர்- ஆப்ரேஷன், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு


NTPC நிறுவனத்தில் உள்ள பொறியாளர் பதவிக்கு அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம்.

உதவி பொறியாளர்/ உதவி கெமிஸ்ட் பதவிக்கு அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம்.

உதவி மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி

பொறியாளர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமெண்டேஷன், பவர் சிஸ்டம், பவர் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், உற்பத்தி, சிவில், கட்டுமானம் ஆகியவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபடசம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


உதவி பொறியாளர்/ உதவி மேனேஜர் பதவிக்கு மெக்கானிக்கல், உற்பத்தி, தொழிற்சாலை பொறியியில், தெர்மல், மெக்கானிக்கல் & ஆட்டோமேஷன், பவர் பொறியியல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமெண்டேஷன், பவர் சிஸ்டம் உள்ளிட்டவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம். குறைந்தபட்சம் 1 வருடம் முதல் 5 வருடங்கள் வரை அனுபவம் தேவை.


உதவி கெமிஸ்ட் பதவிக்கு வேதியியலில் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம் தேவை.


சம்பள விவரம்


பொறியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

உதவி பொறியாளர், உதவி கெமிஸ்ட் பதவிக்கு ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

உதவி மேலாளர் பதவிக்கு ரூ. 60,000 முதல் ரூ.1,80,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் நிறுவனத்தில் விதிமுறைகளின் அடிப்படையில் தேர்வு முறை நிர்ணயிக்கப்படும். விண்ணப்பங்களில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படலாம் அல்லது எழுத்துத் தேர்வு நடத்தப்படலாம்.


விண்ணப்பிக்கும் முறை


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://careers.ntpc.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூன் 11-ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், ஜூன் 25- வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்


விவரம் தேதிகள்

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் 11.06.2025

விண்ணப்பிக்க கடைசி நாள் 25.06.2025

நேர்காணல் / எழுத்துத் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்

மத்திய அரசு நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி பிரிவினர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post