உங்கள் வீட்டு பெண் குழந்தைக்கு ரூ. 15 லட்சம் சேமிக்க ஒரு சூப்பர் வழி! போஸ்ட் ஆபீஸ் வழங்கும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

Follow Us

உங்கள் வீட்டு பெண் குழந்தைக்கு ரூ. 15 லட்சம் சேமிக்க ஒரு சூப்பர் வழி! போஸ்ட் ஆபீஸ் வழங்கும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

 இன்றைய காலக்கட்டத்தில் சேமிப்பு என்பது மிக மிக முக்கியமான ஒன்று. நிலையில்லா வாழ்க்கையில் நம்மை நம்பி இருக்கும் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் ஏதோ ஒரு வகையில் சேமிக்க வேண்டும்.

                                                                                      


அவர்களின் எதிர்காலம், படிப்பு செலவு, திருமணம், பிசினஸ் என அவர்களுக்கு தேவைப்படும் போது, சேமிக்கும் பணம் அவர்கள் கையில் வந்தால், அதை விட சிறந்த ஒரு துணை வேற எதுவும் இருக்காது. அந்த வகையில் சேமிப்பு, நிதி முதலீடு அனைத்து மக்களிடையும் கொண்டு சேர்க்க பல திட்டங்கள் மத்திய மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. கூடவே, அஞ்சல் அலுவலகத்திலும் சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.


அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் இருக்கும் ஒரு சூப்பரான தபால் அலுவலக கால வைப்பு (Post Office FD) திட்டம் பற்றி இதில் பார்க்கலாம். இந்த திட்டமானது வங்கிகளை விட சிறந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம், நீங்கள் விரும்பினால் உங்கள் தொகையை மூன்று மடங்காக்கலாம். அதாவது, நீங்கள் ரூ.5,00,000 முதலீடு செய்தால், அதை ரூ.15,00,000 மாற்ற முடியும்.


இதற்கு ரூ.5,00,000 ஐ தபால் அலுவலக FD இல் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். இதற்கான வட்டி விகிதம் 7.5% ஆகும்., 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகை ரூ.7,24,974 ஆக இருக்கும். இந்த தொகையை எடுக்காமல் மீண்டும் அதே திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். 10 ஆண்டுகளில் உங்கள் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.10,51,175 ஆக மாறி இருக்கும்.


இப்போது மீண்டும் அந்த தொகையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். 15வது ஆண்டில், நீங்கள் முதலீடு செய்த ரூ.5 லட்சம், வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.15,24,149 மாறி இருக்கும். போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த எஃப்டி திட்டத்தை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பிள்ளைக்கு நல்ல சேமிப்பாக 15 ஆண்டுகளில் ரூ. 15 லட்சத்தை தரலம்.

Post a Comment

0 Comments