Saving Scheme : FD-ஐ விட அதிக வட்டி தரும் அசத்தல் சேமிப்பு திட்டங்கள்.. பட்டியல் இதோ!

Follow Us

Saving Scheme : FD-ஐ விட அதிக வட்டி தரும் அசத்தல் சேமிப்பு திட்டங்கள்.. பட்டியல் இதோ!

 பொதுமக்களின் நலனை காக்க அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை (Saving Schemes) செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும்.

இவ்வாறு அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தினாலும், பெரும்பாலான மக்களின் முதன்மை தேர்வாக உள்ளது நிலையான வைப்பு நிதி திட்டம் (FD - Fixed Deposit Scheme) தான். இந்த நிலையில், நிலையான வைப்பு நிதி திட்டத்தை விட அதிக வட்டி வழங்கும் சில திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

                                                                                 


FD-ஐ விட அதிக வட்டி வழங்கும் சிறப்பு திட்டங்கள்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

அஞ்சலங்கள் மூலம் அரசு மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தை (Senior Citizen Saving Scheme) செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

மாத வருமான திட்டம்

அஞ்சலகங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் ஒரு அசத்தலான திட்டம் தான் மாத வருமான திட்டம் (Monthly Income Scheme). இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை வருமானமாக பெற விரும்பும் நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

கிசான் விகாஸ் பத்ரா திட்டம்

கிசான் விகாச் பத்ரா திட்டத்தை (Kisan Vikas Patra Scheme) அரசு அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் முதலீட் செய்தால் 9.5 ஆண்டுகளில் பண இரட்டிப்பாகும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்

அரசு அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தும் ஒரு அசத்தலான திட்டம் தான் தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Saving Certificate). இந்த திட்டத்திற்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ்

அதிக வட்யியுடன் அரசு செயல்படுத்தும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் இந்த மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் (MSSC - Mahila Samman Savings Certificate). இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது

Post a Comment

0 Comments