மத்திய அரசு, 117 ஆண்டுகள் பழமையான பதிவு சட்டத்தை மாற்றி, ஆன்லைனில் சொத்து பதிவு செய்ய அனுமதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
மோடி தலைமையிலான அரசு நாட்டின் பெரும்பாலான சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில், ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல்மயமாக்கி வருகிறது. இவை அனைத்திற்கும் துவக்கம் ஆதார் என்றால் மிகையில்லை, ஆதார் அடிப்படையாக வைத்தே அனைத்து சேவைகளும், டிஜிட்டல்மயமாக்கல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில் மத்திய அரசு, சொத்து பதிவு செய்யும் முறையை மேம்படுத்த புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இது 117 ஆண்டுகள் பழமையான பதிவு சட்டத்தை (Registration Act) மாற்றும் முயற்சியாகும். இந்த புதிய சட்டம் மூலம் மக்கள் தங்கள் சொத்துகளை வாங்கும் போதும், விற்கும் போதும் ஆன்லைனில் பதிவு செய்ய முடியும்.இந்த புதிய சட்ட திருத்தம் மூலம் விற்பனை ஒப்பந்தங்கள், பவர் ஆஃப் அட்டர்னி, விற்பனை சான்றிதழ்கள் மற்றும் அடமான பத்திரங்கள் போன்ற அனைத்து விதிமான சொத்து ஆவணங்களை ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை தெரிவிக்கிறது.
இது சொத்து பதிவு முறையை எளிதாக்குவதோடு, மக்களுக்கு நேரம் மற்றும் செலவை மிச்சப்படுத்தும் என கூறப்படுகிறது.இந்த புதிய சட்டத்திற்கான வரைவு அறிக்கையை ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நில வளங்கள் துறை வெளியிட்டுள்ளது. இதை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, கருத்துக்களை கேட்க உள்ளது மத்திய அரசு. இந்தியாவில் பல மாநிலங்கள் ஆன்லைன் பதிவு முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ள வேளையில் மத்திய அரசின் இந்த முயற்சி முக்கிய கட்டமான பார்க்கப்படுகிறது. இதேபோல் இந்த முறையை மாநில அரசின் விருப்பத்தின் அடிப்படையில் அமல்படுத்தலாம்.
மேலும் மாநில அரசு மத்திய அரசுக்கு மத்தியிலான பேச்சுவாத்தையில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும்.இந்த புதிய சட்டம் மூலம் சொத்து பரிவர்த்தனை தொடர்பான அனைத்து பதிவுகளும் மின்னணு பதிவு சான்றிதழ்களாக வழங்கவும், பதிவேடுகளை டிஜிட்டல் முறையில் பராமரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதோடு ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் பழைய பத்திரங்களும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.இதை ஆதார் அடிப்படையிலான பாதுக்காப்புடன் செய்யப்படும். ஆதார் எண்ணை பகிர விரும்பாதவர்களுக்கு மாற்று சரிபார்ப்பு முறைகளும் வழங்கப்படும்.
இந்த கட்டமைப்பு மூலம் சொத்து பதிவு மோசடிகளை குறைக்க உதவும்.மேலும் இந்த புதிய சட்டத்தின் தீழ், அரசின் கீழ் இயங்கும் மற்ற பதிவு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் திட்டம் முன்வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சொத்து பதிவு தொடர்பான தகவல்கள் எளிதாகவும் விரைவாகவும் பகிரப்படும். மின்னணு முறையில் நாட்டின் அனைத்து ரிஜிஸ்ட்ரேஷனும் ஓரே இடத்தில் பாதுகாப்பாக சேமிக்கப்படும்
0 Comments