நிலத்தின் சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் போன் வாயிலாக அறிவதற்காக, புதிய செயலியை வருவாய் துறை உருவாக்கி வருகிறது..
வருவாய் துறையின் ஆவணங்களிலும், குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலம் இதுதான் என்பதை துல்லியமாக கூற முடியாது என்பதால், இப்புதிய வசதியை விரைவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நிலத்தின் உரிமையாளர் யார் என்பதை அறிய வேண்டுமானால், நிலத்தின் சர்வே எண் தேவைப்படும்.. அப்போதுதான், குறிப்பிட்ட நிலம் யாருக்கு சொந்தம் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இந்த சர்வே நம்பர்கள் அனைத்தையும் அரசே தன்னுடைய இணையதளத்தில் பதிவிட்டுள்ளது..
நில அளவீடு
அதேபோல, நில அளவீடு மற்றும் சர்வே எண்களை பயன்படுத்தி, குறிப்பிட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பையும் கூகுள் மேப்பில் நேரடியாக அறிய முடியும்.
ஒருவரின் நிலம், வீடு யாருக்கு சொந்தம்? எத்தனை சென்ட் உள்ளது என்பதை எளிதாக கூகுள் மேப் மூலம் அறிய முடியும். இதற்கு நீங்கள் எங்கு நின்றுள்ளீர்களோ, அதே இடத்தில் செல்போனிலுள்ள கூகுள் மேப்பில், சேட்டிலைட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பார்த்தால், நாம் நின்றுகொண்டிருக்கும் இடம் தெரியும்..
நிலம் யாருக்கு சொந்தம்
அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்துக் கொண்டு, village master dashboard என்று கூகுளில் டைப் செய்தால், https://tngis.tn.gov.in/apps/village_dashboard/ என்ற வெப்சைட் திறக்கும். இதில், சம்பந்தப்பட்ட நிலம், எந்த மாவட்டம்? எந்த தாலுகா? கிராமமா? நகரமா? என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது ஏற்கனவே எடுத்துவைத்திருக்கும் ஸ்கிரீன் ஷாட்டை, ஸ்கிரீன் தெரியும் மஞ்சள் நிற மேப்புடன் ஒப்பிட்டு பார்த்தால், தற்போது நாம் நின்று கொண்டிருக்கும் இடத்தின் சர்வே நம்பரை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
வெப்சைட் அட்ரஸ்
பிறகு, https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற வெப்சைட்டில், பட்டா சிட்டா விவரங்களை பார்வையிட என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, மாவட்டம், வட்டம், கிராமம் போன்றவற்றையும், பட்டா எண், புல எண் என்ற ஆப்ஷனில் புல எண்ணையும், பிறகு உட்பிரிவு எண்ணையும் குறிப்பிட்டு, கேப்சியாவை பதிவிட வேண்டும். இறுதியாக சமர்ப்பி என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், அந்த நிலத்தின் உரிமையாளர் யார் என்பது தெரிந்துவிடும். அது அரசு நிலமாக இருந்தாலும், அரசு நிலம் என்றே காட்டப்படும்.
இந்நிலையில், தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை கூகுள் வரைபடத்தின் உதவியுடன் அறியவைக்கும் புதிய வசதியை, பதிவுத்துறை விரைவில் அறிமுகப்படுத்த போகிறதாம்.. நில அளவீடு மற்றும் சர்வே எண்களை பயன்படுத்தி, குறிப்பிட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பை மேப்பில் நேரடியாக அறிய முடியும் என்கிறார்கள்..
10 சதவீதம் வழிகாட்டி மதிப்பு
அந்தவகையில், 10 சதவிகிதம் வரை, சென்னை, கோவை, திருச்சி, சேலம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு உயர்வடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு புவியிட தகவல் அமைப்பு (TNGSI) + பதிவுத்துறை இணைந்து இந்த புதிய வசதியை செயல்படுத்த உள்ளதாக தெரிகிறது.. இதன் மூலம், சர்வே நம்பருக்கான நிலத்தின் இருப்பிடத்தை துல்லியமாக அறிய முடியும். இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் பயன்பாட்டுக்கு வரஉள்ளன.
நிலங்களுக்கான சர்வே எண்கள் மற்றும் தெரு அடிப்படையில் வழிகாட்டி மதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 2024 ஜூலை 1 முதல் நடைமுறையில் இருக்கும் வழிகாட்டி மதிப்புகள் தற்போது புதுப்பிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
புவியிட தகவல் தொகுப்பு
ஏற்கனவே, செல்போனில் GPS, புவியிட தகவல் தொகுப்பு வசதியின் பயன்பாடு அதிகமாக உள்ளது.. யார் எங்கு இருக்கிறார்கள் என்பதை லைவ் லொகேஷன் மூலம் அறிய முடிகிறது.. இதை வைத்தும் நிலத்தின் விபரங்களை தெரிந்து கொள்ள முடியுமாம்.
இதற்கு Tamilnilam Gioinfo என்ற ஆப்பில் நுழைந்தால், கூகுள் மேப், சர்வே எண் விபரங்கள் உட்பட அனைத்து விவரங்களை அறியலாம்.. பிரதான சர்வே எண் உட்பட நிலத்தின் சர்வே எண் விபரங்களை துல்லியமாக அறியலாம். அல்லது ஒரு பகுதியின் "அ" பதிவேடு, நில அளவை வரைபடம், பட்டா விபரத்தையும் அறியலாம்.
ஆக மொத்தம், இன்னும் விரைவில் பணிகள் முடிவடைந்து, மக்களின் செயல்பாட்டுக்கு இந்த புதிய செயலி கொண்டு வரப்படும் என்று பதிவுத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
0 Comments