பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?

Follow Us

பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?

 பொறியியல் படிப்பை முடித்தவர்கள், மலேசியாவில் சேர்ந்து பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என்று அயல்‌ நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர்‌ மற்றும் நிர்வாக இயக்குநர்‌ அழைப்பு விடுத்துள்ளார்.

                                                                             


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மலேசியாவில் பணிபுரிய QC INSPECTOR, PIPING ENGINEER, PLANNING ENGINEER, TENDERING ENGINEER, PIPING FOREMAN, PIPE FITTER மற்றும் TIG & ஏஆர்சி வெல்டர் சிஎஸ் தேவைப்படுகிறார்கள்‌. விருப்பம்‌ உள்ளவர்கள்‌ உடனடியாக விண்ணப்பிக்கலாம்‌.

மலேசியாவில்‌ பணிபுரிய பி.இ. மற்றும் பி.டெக். தேர்ச்சி பெற்று மூன்றில்‌ இருந்து ஐந்து வருட பணி அனுபவத்துடன்‌ 24 இருந்து 42 வயதிற்கு உட்பட்ட AC Inspector (Cswip 3.1) பணிக்கு மாத வருமானம்‌ ரூ. 70,000 - 80,000/-, PIPING Engineer பணிக்கு, ரூ.60,000 - 80,000/-. Planning Engineer (Primevara P6) பணிக்கு ரூ 70,000-84,000/- வழங்கப்படும்.

அதேபோல, Tendering Engineer பணிக்கு ரூ. 70,000 - 76,000/-, Piping Foreman பணிக்கு ரூ. 54,000-62,400/- ஆகும்‌. மற்றும்‌ பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள்‌ TIG & ARC Welders CS பணிக்கு மாத வருமானம்‌ ரூ. 41,600-50,000 மற்றும் Pipe Filter பணிக்கு ரூ. 38,000-50,000/- ஊதியமாக வழங்கப்படும்‌. உணவு, விசா இருப்பிடம்‌ மற்றும்‌ விமானப்‌ பயணச் சீட்டு வேலை அளிப்பவரால்‌ வழங்கப்படும்‌.

சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்

மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள்‌ விசா கிடைத்த பின்னர்‌ இந்நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ. 35,400/- மட்டும்‌ செலுத்தினால்‌ போதும்‌.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண்‌ பணியாளர்கள்‌ ovemclnm@gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு தங்களின்‌ சுய விவரம்‌ அடங்கிய விண்ணப்பபடிவம்‌, கல்வி, பணி அனுபவ சான்றிதழ்‌ மற்றும்‌ புகைப்படம்‌ ஆகியவற்றை 29.05.2025க்குள்‌ அனுப்பவும்‌.

கூடுதல்‌ விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம்‌ www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண் (044- 22502267) & வாட்ஸ்‌ ஆப்‌ எண்‌ (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்‌.

இவ்வாறு அயல்‌ நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர்‌ (ம) நிர்வாக இயக்குநர்‌ தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.omcmanpower.tn.gov.in/regformnew/login.php?lang=tm என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.omcmanpower.tn.gov.in/jobInfo.php?jid=465&lang=tm

Post a Comment

0 Comments