தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தில் காலியாக உள்ள 38 பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாக அரசின் திட்டங்களுக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
Green Fellows (பசுமை தோழர்)
காலியிடங்கள்: 38சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு Rs.65,000 + பயணப்படி வழங்கப்பட இருக்கிறது.
கல்வி தகுதி:
குறைந்தபட்சம் 70% மதிப்பெண்ணுடன் இளங்கலை பட்டம் (அல்லது) அதற்கு சமமான CGPA. அல்லதுகுறைந்தபட்சம் 70% மதிப்பெண்ணுடன் (அல்லது) அதற்கு சமமான CGPA-வுடன் உயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல் / மேலாண்மை, சூழலியல் / வனவியல் / வனவிலங்கு / பொதுக் கொள்கை / சுற்றுச்சூழல் பொறியியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 30 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுகள் உள்ளன SC/ ST - 35 வயது
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://environment.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன்னர் உங்கள் புகைப்படம், கையெழுத்து, கல்வி சான்றுகளை ஸ்கேன் செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். விண்ணப்ப கட்டணம்: ஏதுமில்லை
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.05.2025விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.06.2025
தேர்வு செய்யும் முறை:
குறுகிய பட்டியல்நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

0 Comments