5,000 புதிய ஊழியர்களை நியமிக்க Flipkart திட்டம்!

Follow Us

5,000 புதிய ஊழியர்களை நியமிக்க Flipkart திட்டம்!

 பிளிப்கார்ட் முக்கிய பிரிவுகளில் விரிவாக்கம் செய்ய தயாராகி வருகிறது மற்றும் 2025ல் 5,000 புதிய ஊழியர்களை நியமனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

                                                                                   


வால்மார்ட்டிற்கு சொந்தமான ஃபிளிப்கார்ட், அதி உள்ளூர் டெலிவரி, நிதி நுட்பம் மற்றும் ஏஐ சார்ந்த முயற்சிகளை தீவிரமாக்க, 26ம் தேதி நடத்திய நிறுவனத்திற்குள்ளான விவாத அரங்கமான பிலிப்ஸ்டர் கனெக்டில் இந்த திட்டத்தை அறிவித்தது.

புதிய நியமனங்களில் பெரும்பகுதி அதன் குவிக் காமர்ஸ் பிரிவு `ஃபிளிப்கார்ட் மினிட்ஸ்` மற்றும் நிதிநுட்ப மேடை `Super.money` ஆகியவற்றில் அமைந்திருக்கும். நிறுவனம் ஐபிஓ திட்டம் மற்றும் தலைமையகத்தை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றும் முயற்சிக்கு மத்தியில் பல்வேறு பிரிவுகளில் வேகமான வளர்ச்சியை நாடும் நிலையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

நிறுவன உள் உரையாடல் அரங்கில் சீமா நாயர் (SVP and CHRO), ஹேமந்த் பத்ரி (SVP, சப்ளை செயின் தலைவர்), ரமேஷ் குருராஜா (SVP, வாடிக்கையாளர் அனுபவம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

திறன் மேம்பாடு, ஏஐ திறன் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும், நிறுவனத்தின் பணி நியமன கொள்கை பற்றி சீமா நாயர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஊழியர்களிடம் பேசிய குழும சி.இ.ஓ.கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, வாடிக்கையாளர்கள் மற்றும் ஆர்டர்களில் 20 முதல் 25 சதவீதம் காண்பதாகவும், இதை ஜூனில் 30 சதவீதமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வளர்ச்சிக்கு ஃபிளிப்கார்ட் மற்றும் மிந்த்ராவின் பேஷன் பிரிவு முக்கியக் காரணம், என்றார். புதிய வாடிக்கையாளர்களில் 40 சதவீத பங்கு இவற்றில் இருந்து வருகிறது, என்றார்.

"மினிட்ஸ் சிறப்பாக செயல்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 800 முகப்பில்லா கடைகளை இலக்காகக் கொண்டுள்ளோம் என்று கூறியவர், இந்தியாவின் வளரும், குவிக்காமர்ஸ் பிரிவில் இந்த சேவை இந்தியாவில் ஃபிளிப்கார்ட்டின் முக்கிய அம்சமாகிறது," என்றார்.

தினமும் இரண்டு முகப்பில்லா கடைகள் திறக்கப்படும் நிலையில், நிறுவனம் பிளின்கிட், ஜெப்டோ, இண்ஸ்டாமார்ட் போன்றவற்றுடன் போட்டியிடுகிறது. இந்த தகவல் முதலில் மனிகண்ட்ரோல் தளத்தில் வெளியானது. யுவர்ஸ்டோரி சுயேட்சையாக உறுதி செய்கிறது.

வேகமாக வளரும் குவிக் காமர்ஸ் பிரிவுக்கு ஏற்ப ஃபிளிப்கார்ட்டின் மளிகை வர்த்தகம் ஈடு கொடுக்கிறது, என்றும் கூறினார். இதனிடையே, பயணமும் மற்றொரு முக்கிய பிரிவாக அமைகிறது. ஓட்டல்கள், சர்வதேச பயணம், விடுமுறை பயணம் ஆகியவற்றில் குறிப்பாக 400 மில்லியன் இசட் தலைமுறை மத்தியில் புதிய கவனம் செலுத்தப்படுகிறது.

தொழில்நுட்பத்தில் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது. ஏஐ முதலீடு ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

"எதிர்காலத்திற்கு தயாராக இருப்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் கூறியவர் ஏஐ அடுத்த கட்ட வளர்ச்சியில் முக்கிய தூண்," என்றார்.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக அமைந்த மற்றொரு விஷயம் இந்தியாவுக்கு அதன் சட்டப்பூர்வ தலைமையகத்தை மாற்றுவது. இது நோக்கத்தை தெளிவாக்கும் செயல் மற்றும் இந்தியாவின் பொருளாதார, சட்ட விதிகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் செயல், என்று கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

துடிப்பான வளர்ச்சி காணும் Super.money தவிர, புதிய பொருட்கள், தொழில்நுட்பம், விளம்பர நுட்பம், பிரிவுகளில் அனுபவசாலிகளை அமர்த்துவது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முக்கியம் என்றார். எனினும், இந்த நடவடிக்கைகள் நிதி ஒழுக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

நிறுவனம் மாதாமாதம் பயன்படுத்தும் ரொக்கத்தொகையை 40 மில்லியன் டாலரில் இருந்து 20 மில்லியன் டாலராக குறைக்க வேண்டும், என நிறுவனம் கிருஷ்ணமூர்த்திக்கு உத்தரவிட்டதாக மணிகண்ட்ரோல் செய்தி தெரிவிக்கிறது. ஆண்டு ரொக்க பட்ஜெட் 250 மில்லியன் டாலராக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய பிரிவுகளில் கவனம் செலுத்தும் நிலையில் இந்த கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அண்மை மாதங்களில் நிறுவனத்தில் இருந்து, அங்கித் ஜெயின் (SVP, மளிகை, சப்ளை சைன்), பிரஜக்தா கனக்லேகர் (VP, HR), அனுராக் சங்வி (VP, அனல்டிக்ஸ்), கணேஷ் ராமசாமி (CPTO, Cleartrip) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.

Post a Comment

0 Comments