ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO), சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுடன் தொடர்புடைய ஊழியர்கள் இனி ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்கள் UAN கணக்கை உருவாக்கி செயல்படுத்தும் ஒரு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும், UAN உருவாக்கத்துடன் தொடர்புடைய பொதுவான பிழைகளை நீக்குவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.மேலும் கோடிக்கணக்கான EPFO உறுப்பினர்களுக்கு தொடர்பு இல்லாத, பாதுகாப்பான மற்றும் முற்றிலும் டிஜிட்டல் சேவை விநியோகத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். இதன் மூலம் 'UMANG' மொபைல் செயலியின் உதவியுடன், ஆதார் முக அங்கீகார தொழில்நுட்பத்தை (FAT) பயன்படுத்தி, ஊழியர்கள் நேரடியாக தங்களின் UAN எண்ணை உருவாக்கிக் கொள்ள முடியும். புதிய பணியாளராக இருந்தாலும் ஆதார் FAT ஐப் பயன்படுத்தி UAN ஐ உருவாக்கிக் கொள்ளலாம் எனவும் மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்தார்
UAN உருவாக்கத்தில் முந்தைய சவால்கள்: முன்னதாக, UAN உருவாக்கம் பொதுவாக பணியாளர்களின் நியமனத் துறை மூலம் செய்தது, இதன் மூலம் பெயர்கள், மொபைல் எண்கள் மற்றும் பிற விவரங்களில் அடிக்கடி பிழைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. மேலும், சில சமயங்களில் பணியாளர்கள் UAN விவரங்களை பெற்றுக் கொள்வதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டு, UAN செயல்படுத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டன
2024-25 நிதி ஆண்டில், 1.26 கோடியுக்கும் மேற்பட்ட UANகள் ஒதுக்கப்பட்டாலும், ஆதார் OTPகளைப் பயன்படுத்தி சிக்கலான செயல்படுத்தல் செயல்முறை காரணமாக அவற்றில் 35% மட்டுமே செயல்படுத்தப்பட்டன. இதன் விளைவாக EPFO சேவைகளுக்கான அணுகல் குறைவாக இருந்தது.முக அங்கீகார செயல்முறை: இந்தநிலையில் புதிய செயல்முறை மூலம், ஊழியர்கள் இப்போது நேரடியாக UMANG செயலியை பயன்படுத்தி தங்களின் UAN ஐ உருவாக்கவும் செயல்படுத்தவும் முடியும், இதற்கு நிறுவனங்களின் தலையீடு தேவையில்லை. இதன் மூலம், ஊழியர்கள் UMANG மற்றும் AadhaarFaceRD செயலிகள் இரண்டையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயல்முறை எளிமையானது மற்றும் சில வழிமுறைகள் மூலம் செயல்முறையை முடிக்கலாம்.
UMANG மற்றும் AadhaarFaceRD என்ற இரு செயலிகளையும் Play Store-இல் இருந்து பதிவிறக்கம் செய்யவும்.UMANG செயலியை திறந்து, UAN சேவைகளின் கீழ் UAN ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்தல்" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.பின்னர் உங்கள் ஆதார் எண் மற்றும் அதுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.உங்கள் ஒப்புதலை வழங்கி, மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ சரிபார்க்கவும்.சாதனத்தின் கேமராவைப் பயன்படுத்தி நேரடி புகைப்படத்தை எடுக்கவும்.கணினி புகைப்படத்தை ஆதார் பதிவுகளுடன் பொருத்தி, UAN-ஐ உருவாக்குகிறது, பிறகு, அந்த UAN எண் SMS மூலம் அனுப்பப்படுகிறது.UAN உருவாக்கப்பட்ட பின், அது தானாகவே செயல்படுத்தப்படுகிறது, ஊழியர் உடனடியாக தங்களின் e-UAN கார்டை பதிவிறக்கம் செய்ய முடியும்.
புதிய முறையின் நன்மைகள்: புதிய ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார அமைப்பு பல நன்மைகளை வழங்குகிறது, 100 சதவீத அடையாள சரிபார்ப்பு: முக பொருத்துதம் ஊழியர்களின் சரியான அடையாளத்தை உறுதி செய்கிறது.ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தானாக சரிபார்க்கப்படுகிறது.
நிறுவனங்களின் தலையீடு இல்லாமல், ஊழியர்கள் தாங்களே UAN ஐ உருவாக்கி செயல்படுத்த முடியும்.UAN உருவாக்கம் செய்யும் போது தானாகவே செயல்படுத்தப்படுகிறது, இது EPFO சேவைகள் (பாஸ் புக்கை பார்வையிடல், KYC மேம்படுத்தல், மற்றும் கோரிக்கை சமர்ப்பணம்) உடனடியாக அணுகுதலை அனுமதிக்கின்றது.பிழை குறைப்பு: இந்த புதிய முறை UAN ஆன்போர்டிங்கில் பொதுவான பிழைகள் மற்றும் தாமதங்களை குறைக்கிறது.ஓய்வூதியதாரர்களுக்கான அமைப்பை விரிவுபடுத்துதல்: ஓய்வூதியதாரர்களுக்கும் முக அங்கீகாரத்தை விரிவுபடுத்தவும் EPFO திட்டமிட்டுள்ளது. My Bharat உடன் இணைந்து, இளம் தன்னார்வலர்கள் ஜீவன் பிரமானைப் பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்களுக்கு உதவுவார்கள், இதன்மூலம், முதியவர்கள் அவர்களது வீட்டிலேயே டிஜிட்டல் முறையின் பலன்கள் தெரிந்துகொள்வார்கள்.இந்த புதிய முறை கடந்த 15 நாட்களில் EPFO அறிவித்த மற்றொரு முக்கிய எளிமை செய்தி ஆகும். அதாவது, கடந்த வாரம், EPFO இரண்டு முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியது, cheque leaf மற்றும் அங்கீகாரம் பெற்ற வங்கி பாஸ் புக் படத்தை பதிவேற்ற தேவையை அகற்றுவது, மற்றும் UAN உடன் வங்கி கணக்கு விவரங்களை சேர்க்கும் போது பணியாளர் அனுமதி தேவையை நீக்குவது ஆகும்.
0 Comments