தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படவுள்ள TNPSC GROUP IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
TNPSC GROUP IV தேர்வுக்கான இலவச பயிற்சி
குரூப் 4 தேர்வு என்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் ஒரு போட்டித் தேர்வாகும், இது அரசுத் துறைகளில் நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பதவிகள் அடங்கும்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படவுள்ள TNPSC GROUP IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜனவரி 2025 முதல் (திங்கள் முதல் வெள்ளி) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்று வருகிறது.
மேலும் இப்பயிற்சி வகுப்பிற்கான இலவச TEST BATCH 22.04.2025 காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த பாடவாரியான தேர்வுக்கு கலந்து கொண்டு பயனடைய விரும்பும் நபர்கள் தங்களுடைய passport Size photo மற்றும் ஆதார் நகலுடன் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
2025-ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகும். அறிவிப்பு வெளியான பின்னர் காலிப்பணியிடங்களின் விவரம் தெரியவரும். இதற்கான தேர்வு 13.07.2025 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
0 Comments