குட் நியூஸ்..! வீட்டு லோன் எடுத்தவர்களுக்கு பெரிய நிம்மதி..!

ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி அளவு நிர்ணயம் செய்யப்படும். இந்த வட்டி விகித நிர்ணயம்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது.

                                                                            


இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியை நிர்ணயம் செய்யும். இந்த விகிதம் உயர்ந்தால் வட்டி உயரும். அதேபோல் கட்ட வேண்டிய தொகை உயரும். ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் வட்டி உயர்வதால் இஎம்ஐ கட்ட வேண்டிய காலமும் உயரும். உதாரணமாக நீங்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கட்டுகிறீர்கள். 20 வருடங்களுக்கு இஎம்ஐ கட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ரெப்போ ரேட் உயரும் பட்சத்தில் நீங்கள் கட்ட வேண்டிய வட்டி கூடுதல் ஆகும். இதனால் இஎம்ஐ உயரும். ஒருவேளை இஎம்ஐ உயராத பட்சத்தில் வங்கிகள் இஎம்ஐ செலுத்தும் காலத்தை உயர்த்தும். உதாரணமாக இஎம்ஐ 35 ஆயிரமாக உயரும் அல்லது இஎம்ஐ செலுத்தும் காலம் 25 ஆண்டுகள் கூட ஆகும். இது வெறும் உதாரணம்தான். ரெப்போ ரேட் உயரும், இறங்கும் விகிதத்தை வைத்து இது மாறும். இப்படிப்பட்ட நிலையில்தான் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு முக்கியமான நற்செய்தி ஒன்றை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.


பொதுவாக ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்வது அல்லது இஎம்ஐ காலத்தை உயர்த்துவது பற்றி வங்கிதான் முடிவு எடுக்கும். அதாவது உங்களிடம் கேள்வி கேட்காமல் அவர்கள் முடிவு எடுத்து உங்களிடம் தெரிவிப்பார்கள். லோன் அடுத்தவர்களுக்கு இதில் குரல் எதுவும் கிடையாது. அவர்கள் முடிவு எதையும் எடுக்க முடியாது. அதன்படி இனிமேல், உங்களது ஒப்புதல் இல்லாமல் இதில் மாற்றங்களை செய்ய முடியாது. வீட்டுக்கடன் காலத்தை அல்லது EMI ஐ வங்கிகள் மாற்ற முடியாது. இதில் வங்கிகள் - லோன் வாங்கியவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும்.


அதேபோல் வீட்டுக்கடன் காலத்தை உயர்த்த வேண்டும் என்று உங்களை வங்கிகள் வறுபுறுத்த முடியாது. அதேபோல் EMI ஐ வங்கிகள் மாற்றுவதை பற்றியும் வங்கிகள் பிரஷர் கொடுக்க முடியாது. நீங்கள் சொல்லும் முடிவையே இனி வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்த முடியாது. உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். அதாவது ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்வது அல்லது இஎம்ஐ காலத்தை உயர்த்துவது பற்றி நீங்கள் எடுக்கும் முடிவை வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்த்த விரும்பினால் உயர்திக்கொள்ளலாம். இஎம்ஐ காலத்தை உயர்த்த விரும்பினால் அதை உயர்திக்கொள்ளலாம்.


ரெப்போ விகிதம் இந்த வருட தொடக்கத்தில் 6.50% ஆக இருந்தது. அதன்பின் பிப்ரவரியில் இதன் விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் அப்போது வட்டி விகிதம் 6.25% ஆக உள்ளது. இது வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு பெரிய பலன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் இரண்டு முறை ரெப்போ குறைக்கப்பட்டு தற்போது ரெப்போ விகிதம் 6% ஆக உள்ளது.


SBI முந்தைய வட்டி விகிதம் 9.15%, புதிய வட்டி விகிதம் 8.80%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,609, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹976


HDFC வங்கியின் முந்தைய வட்டி விகிதம் 9.25%, புதிய வட்டி விகிதம் 8.90%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,816, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹945


ஐசிஐசிஐ வங்கி முந்தைய வட்டி விகிதம் 9.20%, புதிய வட்டி விகிதம் 8.85%, ₹50 லட்சத்துக்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,712, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹958


பாங்க் ஆஃப் பரோடா முந்தைய வட்டி விகிதம் 9.10% , புதிய வட்டி விகிதம் 8.75%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,506, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹983


Axis Bank முந்தைய வட்டி விகிதம் 9.30% , புதிய வட்டி விகிதம் 8.95%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,919, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹933


பஞ்சாப் நேஷனல் வங்கியின் முந்தைய வட்டி விகிதம் 9.20%, புதிய வட்டி விகிதம் 8.90%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,816, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹945


Kotak Mahindra வங்கியின் முந்தைய வட்டி விகிதம் 9.35%, புதிய வட்டி விகிதம் 9.00%, ₹50 லட்சத்துக்கான EMI (20 ஆண்டுகள்) ₹46,022, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹910


யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா முந்தைய வட்டி விகிதம் 9.10%, புதிய வட்டி விகிதம் 8.75%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,506, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹983

Post a Comment

0 Comments