விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஐடிபிஐ வங்கியில் வேலை!

 மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியான இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கியான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 119 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பட்டதாரிகள் விரைந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

                                                                         


விளம்பர எண். 01/2025-26


பணி: Manager, Deputy General Manager, Asst. General Manager


காலியிடங்கள்: 119


பணி: Manager


சம்பளம்: மாதம் ரூ.64,820 - 1,24,000


பணி: Deputy General Manager


சம்பளம்: மாதம் ரூ.1,02,300 - 1,97,000


பணி: Asst. General Manager


சம்பளம்: மாதம் ரூ.85,920 - 1,64,000


வயது வரம்பு: 1.4.2025 தேதியின்படி மேலாளர் பணிக்கு 25 முதல் 35-க்குள்ளம், Asst. General Manager 28 முதல் 40 வயதிற்குள்ளும், Deputy General Manager பணிக்கு 35 முதல் 45-க்குள்ளும் இருக்க வேண்டும்.

வயது வரம்பில் எஸ்சி,எஸ்சி, ஒபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகைகள் வழங்கப்படும்.


தகுதி: ஐடி, எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன்ஸ், மென்பொருள் பொறியியல், கணினி அறிவியல், டிஜிட்டல் வங்கி, கணினி பயன்பாடு போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ(நிதி) போன்ற ஏதாவதொற்றை முடித்திருப்பதுடன் நல்ல பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்களுக்கு நேர்முகத்தேர்வு விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250. இதர அனைத்து பிரிவினரும் ரூ.1050 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.idbibank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.4.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்


Post a Comment

0 Comments