"இனி ஆதார் கார்டை கையிலேயே வைத்திருக்க தேவையில்லை"! புதிய ஆதார் செயலி அறிமுகம்!. இதனால் என்ன பயன் தெரியுமா?

Follow Us

"இனி ஆதார் கார்டை கையிலேயே வைத்திருக்க தேவையில்லை"! புதிய ஆதார் செயலி அறிமுகம்!. இதனால் என்ன பயன் தெரியுமா?

 டிஜிட்டல் வசதி மற்றும் தனியுரிமையை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, மத்திய அரசு செவ்வாய்க்கிழமை புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலி மூலம் பயனாளர்கள் தங்களுடைய ஆதார் விவரங்களை டிஜிட்டலாக சரிபார்த்து பகிர முடியும். இதன்மூலம் ஆதார் கார்டை உடன்கொண்டு செல்லவும், புகைப்பட நகல்களை வழங்கவும் தேவையில்லை.”

                                                                          


இந்த செயலியை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் டெல்லியில் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், இந்த செயலி ஆதார் சரிபார்ப்பை எளிதாக்கவும், விரைவாக்கவும், மேலும் பாதுகாப்பாக மாற்றவும் செய்யும் ஒரு முக்கிய முயற்சி எனக் குறிப்பிட்டார்.”

இதுகுறித்து மத்திய அமைச்சர் வைஷ்ணவ் தனது சமூக ஊடக தளமான ‘X’-ல் வெளியிட்ட வீடியோ செய்தியில், “புதிய ஆதார் செயலி, மூலமாக இனி கார்டும் தேவையில்லை, புகைப்பட நகல்களும் தேவையில்லை, என தெரிவித்துள்ளார். மேலும், இந்த செயலி பயனாளர்கள் தேவையான தகவல்களை மட்டும் பாதுகாப்பான டிஜிட்டல் முறையில், அவர்களின் ஒப்புதலோடு பகிரும் திறனை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.

இப்போது ஒரு முறை தொட்டாலே, பயனர்கள் தேவையான தரவை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும், இது அவர்களின் தனிப்பட்ட தகவல்களின் மீது முழுமையான பாதுகாப்பை அவர்களுக்கு வழங்குகிறது,” என்று அவர் கூறினார். இந்த செயலியின் முக்கிய அம்சங்களில் ஒன்று Face ID அடையாளம் காணும் தொழில்நுட்பமாகும், இது பாதுகாப்பை அதிகரித்து ஆதார் சரிபார்ப்பை எளிதாக்குகிறது. தற்போது, ஒரு QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமே ஆதார் சரிபார்ப்பு செய்ய முடியும். இது UPI பேமெண்ட் செய்வதைப் போன்று எளிதானது.

ஆதார் சரிபார்ப்பு இப்போது UPI பேமெண்ட் செய்வது போல் எளிதாகியுள்ளது. பயனாளர்கள் தங்கள் ஆதார் விவரங்களை டிஜிட்டலாக சரிபார்த்து பகிர முடியும், அதேசமயம் தங்களின் தனியுரிமையும் பாதுகாக்கப்படுகிறது,” என அமைச்சர் ‘X’ தளத்தில் எழுதியுள்ளார். இந்த புதிய முறையின் மூலம், இனி ஹோட்டல்கள், கடைகள், விமான நிலையங்கள் மற்றும் பிற சரிபார்ப்பு இடங்களில் ஆதார் கார்டின் நகலை வழங்க வேண்டிய தேவையில்லை. “ஹோட்டல் வரவேற்புகள், கடைகள் அல்லது பயணத்தின் போது ஆதார் புகைப்பட நகலை ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை” என்று அவர் வலியுறுத்தினார்.

தற்போது பீட்டா சோதனை நிலையில் இருக்கும் இந்த செயலி, வலிமையான தனியுரிமை பாதுகாப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆதார் விவரங்களை போலி செய்யவும், திருத்தவும் அல்லது தவறாக பயன்படுத்தவும் இயலாது. தகவல்கள் பாதுகாப்பாகவும், பயனாளரின் அனுமதி இருந்தாலேயே பகிரப்படும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆதாரை பல அரசு முயற்சிகளின் “ஆதாரம்” என விளக்கிய அஷ்வினி வைஷ்ணவ், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் பொது வளமைப்புகள் (DPI) வகிக்கும் முக்கியப் பங்கு குறித்தும் வலியுறுத்தினார். தனியுரிமையை மையமாக வைத்து, வளர்ச்சியை மேலும் விரிவாக்க AI-ஐ DPI-யுடன் ஒருங்கிணைக்கும் வழிகளை முன்மொழிய அனைத்து பங்குதாரர்களைளுக்கும் அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.







Post a Comment

0 Comments