கோவையில் அரசு அங்கீகாரம் இன்றி கட்டணம் வசூல் செய்ததாக எழுந்த புகாரின் பேரில், மக்கள் சேவை மையம் மூடப்பட்டது.
கோவை ஒண்டிப்புதூரில் மக்கள் சேவை மையம் உள்ளது. இங்கு இ-சேவை மைய பயிற்சி அளிப்பதற்கு ரூ.16 ஆயிரம் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில், கோவை தெற்கு வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் அந்த மக்கள் சேவை மையத்தில் ஆய்வு செய்தனர்.
இதில், அந்த மையம் அரசு அங்கீகாரம் பெறாமல் கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. மேலும், ஆன்லைன் மூலம் மாநிலம் முழுவதும் 45 பேருக்கு மேல் பயிற்சி அளித்ததும் தெரியவந்தது. போலி இணையதளம் உருவாக்கி மக்கள் சேவை மையம் என்ற பெயரில் வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி மூலமாக புதிய நபர்களை சேர்க்கும் முயற்சியும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து உரிய அங்கீகாரம் பெறாமல் கட்டணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக, மக்கள் சேவை மையத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்
0 Comments