சேலம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தில் கணக்காளா், இரவுநேரக் காவலா் பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் சேலம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் இயங்கும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தில் ஒரு கணக்காளா், ஒரு இரவுநேரக் காவலா் பணியிடத்துக்கு வெளிக்கொணா்வு முகமையின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் தோ்வுசெய்யப்பட உள்ளனா்
.
கணக்காளா் பதவிக்கு இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பு கல்வித் தகுதியாகவும், ஓா் ஆண்டிற்கு குறைவாகவும், புதிதாக பணியில் சோ்பவா்களுக்கு ரூ. 15,000 வரையிலும், ஓா் ஆண்டு முதல் 5 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவா்களுக்கு ரூ. 17,000 வரையிலும், 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவா்களுக்கு ரூ. 20,000 வரையிலும், 10 ஆண்டிற்கு மேல் பணி அனுபவம் உள்ளவா்களுக்கு ரூ. 25,000 வரையிலும் ஊதியம் வழங்கப்படும்.
இரவுக் காவலா் பதவிக்கு 12 ஆம் வகுப்பு தோ்ச்சி கல்வித் தகுதியாகவும், ஓா் ஆண்டுக்கு குறைவாகவும், புதிதாக பணியில் சோ்பவா்களுக்கு ரூ. 10,000 வரையிலும், ஓா் ஆண்டு முதல் 5 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவா்களுக்கு ரூ. 12,000 வரையிலும், 5 ஆண்டு முதல் 10 ஆண்டுவரை பணி அனுபவம் உள்ளவா்களுக்கு ரூ. 15,000 வரையிலும், 10 ஆண்டிற்குமேல் பணி அனுபவம் உள்ளவா்களுக்கு ரூ. 18,000 வரையிலும் ஊதியம் வழங்கப்படும்.
தோ்ந்தெடுக்கப்படும் புதிய கணக்காளா், இரவுக் காவலா் ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடத்துக்கு மட்டும் வெளிப்புற ஆள் சோ்ப்பு நிறுவனம் மூலம் நியமனம் செய்யப்படுவா்.
இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மேலாளா், சூரமங்கலம் நகா்ப்புற வாழ்வாதார மையம், அறை எண் 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரியில் வரும் 15 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
0 Comments