டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் சிம்பிளாக வெற்றி பெறுவது எப்படி?

Follow Us

டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் சிம்பிளாக வெற்றி பெறுவது எப்படி?

 டிஎன்பிஎஸ்சி (TNPSC), எஸ்எஸ்சி (SSC), போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற சில முக்கியமான உத்திகள் மற்றும் திட்டமிடல் தேவை.

முக்கியமாக தமிழ்நாட்டில் ஜூலை மாதம் டின்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடக்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறையும் தொடங்கிவிட்டது. நீங்கள் டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

                                                                                  



1. தேர்வின் முறையை அறிந்து கொள்ளுங்கள்


பாடத்திட்டம் (Syllabus): முதலில் TNPSC/ SSC போன்ற தேர்வுகளின் முழு பாடத்திட்டத்தையும் படித்து, ஒவ்வொரு பாடத்திற்கும் எடுத்துக்கொள்ள வேண்டிய நேரத்தை திட்டமிடுங்கள். தேர்வு முறை (Exam Pattern) அறிந்து கொள்ளுங்கள். பல தேர்வு வினாக்கள் (MCQ) உள்ளதா?, நெகடிவ் மார்க்கிங் உள்ளதா?, எந்த பிரிவுகளுக்கு அதிக மதிப்பெண்கள் உள்ளன?, உதாரணமாக TNPSC-ல் தமிழ் அல்லது ஆங்கிலம், SSC-ல் ஜி.கே., கணிதம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்


2. பாடப்புத்தகங்கள் & ஆதாரங்களைத் தேர்ந்தெடுக்கவும்


TNPSC: 6th to 12th வரை தமிழ்நாடு அரசின் பாடநூல் கழகத்தின் புத்தகங்களை படிக்கவும். இதுதவிர பிரபலமான, அதாவது தமிழ்நாடு அரசே நடத்தும் கல்வி தொலைக்காட்சி, AIM TN வகுப்புகளில் கொடுக்கப்படும் மெட்டீரியல்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.


SSC: குவாண்டிடேட்டிவ் ஆப்டிடியூட் (Quantitative Aptitude) - R.S. Aggarwal, ஜெனரல் அவேர்னஸ் (General Awareness) - லூசென்ட் ஜிகே. படிக்கலாம்.


3. நடைமுறைத் தேர்வுகள் (Mock Tests) எடுக்கவும்


ஒரு நாளைக்கு குறைந்தது 1 மாக் டெஸ்ட் எடுத்து, தவறுகளை பகுப்பாய்வு செய்யுங்கள். Previous Year Question Papers படித்து, முக்கியமான தலைப்புகளை கண்டறியவும். நேர மேலாண்மை (Time Management) பயிற்சி செய்யுங்கள்.


4. குறிப்புகள் (Short Notes) தயாரிக்கவும்


ஒவ்வொரு பாடத்திலும் முக்கியமான தேதிகள், சூத்திரங்கள், சுருக்கங்கள் என்பவற்றை குறிப்பெடுக்கவும். இந்த குறிப்புகள் கடைசி நிமிடத்தில் படிப்பதற்கு உதவும்.


5. தற்போதைய நிகழ்வுகள் (Current Affairs)


தினசரி செய்தித்தாள்கள் படிக்கவும். மாதாந்திர நிகழ்வுகள் (PIB, Yojana Magazine) படிக்கவும். குறிப்பிட்ட TNPSC/SSC-க்கான செய்தி தொகுப்புகளை பின்தொடரவும்.


6. ஆன்லைன் வகுப்புகளை பயன்படுத்துங்கள்


YouTube-ல் இயங்கும் உங்களுக்கு பிடித்த ஒரு டிஎன்பிஎஸ்சி சேனலை தொடர்ச்சியாக பின் தொடரவும். தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சி, AIM TN போன்ற சேனல்களை பின்தொடரலாம்.


7. உடல் & மன ஆரோக்கியம்


6 முதல் 7 மணி தூக்கம் முக்கியம்.யோகா மற்றும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். ஒரு நாளைக்கு 8-10 மணி நேரம் படிப்பதுடன், குறுகிய இடைவெளிகள் வைக்கவும்.


8. கடைசி நாள் தயாரிப்பு


முக்கியமான தலைப்புகளை மட்டும் திரும்பப் படியுங்கள்.

மன அழுத்தத்தை தவிர்க்கவும், நம்பிக்கையுடன் இருங்கள்.

"ஒழுங்கான திட்டம் + தொடர்ந்த முயற்சி = வெற்றி"


தினமும் குறைந்தது 5-6 மணி நேரம் ஒதுக்கி, சீரான பயிற்சி செய்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.

Post a Comment

0 Comments