முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஐபிஎம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து அவ்வப்போது வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஐபிஎம் நிறுவனத்தில் அப்ளிகேஷன் டெவலப்பர் - க்ளைவுட் ஃபுல்ஸ்டாக் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றிய விபரங்களை இங்கே பார்க்கலாம்.
ஐபிஎம்மில் அப்ளிகேஷன் டெவலப்பர் - க்ளைவுட் ஃபுல்ஸ்டாக் (Application Developer - Cloud Fullstack) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மாஸ்டர் டிகிரி படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு பணி அனுபவம் என்பது தேவையில்லை. இருப்பினும் விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா 8, springBoot, Rest API, Containerization with Docker தெரிந்திருக்க வேண்டும். அதோடு ஜாவாவில் டெவலப்மென்ட் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும. Cloud Exposure-ல் AWS/GCP/Azure உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்கும் திறமை என்பது இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்படுவார்கள். ஷிப்ட் Daytime-ல் தான் இருக்கும். இது ஒரு ஹைபிரிட் வகை பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தும் கூட பணியாற்றும் வாய்ப்பு என்பது வழங்கப்படும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
0 Comments