தேர்வர்களே குறிச்சிக்கோங்க... டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் புதிய மாற்றம்!

 தமிழ்நாட்டில் அரசு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளின் மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்பட்டு வருகின்றனர்

                                                                                  


இந்நிலையில் நடப்பாண்டில் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி ஓ.எம்.ஆர் விடைத்தாளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான்லூயிஸ் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. புதிய ஓ.எம்.ஆர். விடைத்தாளின் மாதிரி படிவம், www.tnpsc.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் 4 இலக்க வினாத் தொகுப்பு எண்ணை அதற்குரிய வட்டங்களில் கருமை நிற பந்துமுனை பேனாவை பயன்படுத்தி செலக்ட் செய்ய வேண்டும்.

மேலும், ஓ.எம்.ஆர் விடைத்தாளின் பக்கம் 1, பகுதி-2ல் தேர்வர்கள் உறுதிமொழி அளித்து கையொப்பமிட வேண்டும். தேர்வாணையத்தால் நடத்தப்பட இருக்கும் இனி வரும் அனைத்து ஓ.எம்.ஆர். முறை தேர்வுகளிலும், பங்கேற்க உள்ள தேர்வர்கள், புதிய மாதிரி ஓ.எம்.ஆர். விடைத்தாளினை நன்கு பார்த்து அறிந்துக் கொண்டு தேர்வு எழுத வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments