விருதுநகரில் வேலை வாய்ப்பு முகாம்.. அன்றே வேலை வாய்ப்புக்கான ஆணை வழங்கப்படும் !

 தமிழ்நாடு அரசின் நிறுவனமான டான்செம் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான ரே ஆப் ஹோப் தொழிற்நுட்ப பயிற்சியகம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த ஜிங்கா அறக்கட்டளை இணைந்து நடத்தும் வேலை வாயப்ப்பு முகாம் 09.04.2025-அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

                                                                            


வேலை வாய்ப்புக்கான முகாம்


தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் டான்செம் நிறுவனம், உலகளாவிய வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உரிய வேலைவாய்ப்புகளை கண்டறிந்து அவர்களுக்கு அந்த வேலை சார்ந்த பயிற்சிகளை அளித்து வேலையில் அமர்த்தும் பணியை டான்செம் நிறுவனம் சிறப்பாக செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் பயின்ற ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல் பட்டதாரிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் மற்றும் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான முகாம் வருகின்ற 09.04.2025 அன்று காலை 8.30 மணி முதல் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், வீரசோழன் கிராமத்தில் உள்ள அல் அமீன் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்படும்


இந்த வேலைவாய்ப்பு முகாமில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் முன்னணி நிறுவனத்தின் சார்பில் நேர்காணல் நடத்தப்படும். அதில் வெற்றியடைந்த இளைஞர்களுக்கு அன்றே வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு gcc.tansam@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும், 86818-78889, 95148-38485, 97906-89052, 98845-76254 என்ற தொலை பேசி எண்களிலும் அல்லது https://tansam.org/GCC என்ற இணையதள வழியாக விவரங்களை பெற்று பயனடையலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு என மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments