டிஎன்எஸ்டிசி எனப்படும் தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்ற விவரங்களை பார்க்கலாம்.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மட்டும் இன்றி அண்டை மாநிலங்களுக்கும் அரசு பேருந்துகள் போக்குவரத்து கழகங்கள் வாயிலாக இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து கழகங்களில் நடத்துனர், டிரைவர் என சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
அரசு போக்குவரத்து கழகங்களில் அவ்வப்போது அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ற விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
என்ஜினியரிங் பிரிவு:
1. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - 130
2. சிவில் இன்ஜினியரிங் - 20
3. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 07
டிப்ளமோ:
1.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - 230
2. சிவில் இன்ஜினியரிங் - 20
3. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 20
பட்டதாரிகள்:
பிஏ/பிஎஸ்சி/பிகாம்/பிபிஎம்/பிபிஏ/ பிசிஏ- 151 பணியிடங்கள்
கல்வித் தகுதி:
இன்ஜினியரிங், டிப்ளமோ பிரிவு பணியிடங்களுக்கு பயிற்சி பணியிடங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்திற்கு தகுந்தபடி துறைவாரியான பாடப்பிரிவை எடுத்து படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 2021 முதல் 2024 வரையில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
ஊதியம் எவ்வளவு?
1.இன்ஜினியரிங் பொறியியல் பயிற்சிப் பட்டதாரிகள் - ரூ.9000/-
2. டிப்ளமோ (டெக்னிஷியன் ) பயிற்சிப் பட்டதாரிகள் - ரூ.8000/-
3. இன்ஜினியரிங் அல்லாத பயிற்சிப் பட்டதாரிகள் - ரூ.9000/ மாதம் ஊதியமாக வழங்கப்படும். இதர சலுகைகள் எதுவும் கிடையாது. இந்த ஊதியம் மட்டுமே அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?:
ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலான இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று தமிழக போக்குவரத்து கழகங்களில் உள்ள அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதில் கோரப்பட்டுள்ள விவரங்களை நன்கு படித்து புரிந்து கொள்வது அவசியம். விண்ணப்பிக்க வரும் 22.04.2025 கடைசி நாளாகும்.
தேர்வு முறை:
மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 30.04.2025 அன்று ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் வெளியாகும். சான்றிதழ் சரிபார்ப்பு குரோம்பேட்டையில் உள்ள எம்டிசி டெப்போவில் 10.05.2025 முதல் 14.05.2025 வரை நடைபெறும். மேலும் விவரங்கள் அறிய https://nats.education.gov.in/uploads/events/sr/TNSTC.pdf
0 Comments