சாமானியர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் பல திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டங்கள் தற்போது கோடிக்கணக்கான மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன.
அப்படி இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு ஏற்ற ஒரு திட்டம் உள்ளது. அத்தகைய திட்டத்தை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம். பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்" (PMMY) தான் அந்த பொன்னான திட்டம்.நாட்டில் உள்ள ஏழை எளியவரையும் வருங்காலத்தில் பெரும் தொழில்முனைவராக மாற்ற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமாகும். சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாலும் சிலருக்கு போதிய பணம் இருப்பதில்லை.
அத்தகையவர்களுக்கு உதவுவதற்காக 2015-ஆம் ஆண்டு அரசு முத்ரா யோஜனா திட்டத்தை கொண்டு வந்தது. இதனையடுத்து 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் தொழில் முனைவோருக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கடன் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் 2024-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் முத்ரா யோஜனா திட்டத்தின் அதிகபட்ச கடன் தொகையை ரூ.
20 லட்சமாக அரசு அதிகரித்தது. இந்த திட்டத்தின் கீழ் 4 பிரிவுகளின் கீழ் கடன் கடன் வழங்கப்பட்டு வருகிறது. சிஷு, கிஷோர், தருண் மற்றும் தருண் பிளஸ் ஆகிய பெயர்களில் வழங்கப்படுகிறது.தண்ணீர் முதல் மின்சாரம் வரை! பெங்களூரு மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் கட்டண உயர்வுகள்!சிஷு பிரிவின் கீழ் ரூ.50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. கிஷோர் பிரிவின் கீழ் ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
தருண் பிரிவின் கீழ் ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன்களை எல்லாம் பெற்று சரிவர திருப்பி செலுத்தி இருந்தால் தருண் பிளஸ் பிரிவின் கீழ் மேற்கொண்டு ரூ.10 லட்சம்.. அதாவது ரூ.
20 லட்சம் வரை கடன் பெற்று பலனடைய முடியும்.இந்த திட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களோ அல்லது விவசாயிகளோ எந்த வித கடனையும் பெற முடியாது. அதே நேரம் இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் எந்தவித அடமானமும் இல்லாமல் உங்களால் கடன் பெற முடியும். விவசாயிகளுக்கு ஏற்கனவே எண்ணற்ற திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்கள், அதனை மேம்படுத்த விரும்புபவர்கள் அல்லது புதிதாக தொழில்
தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.முத்ரா கடன் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?: இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க நீங்கள் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வணிக வங்கிகள் என எந்த வங்கிக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
ஆனால் விண்ணப்பிப்பதற்கு முன்பு அவர்களிடம் நீங்கள் சரியான ஆவணங்களை விண்ணப்பிக்க வேண்டும். அதில் எதிர்காலத்தில் உங்களுக்கு எவ்வளவு வருமானம் வரும்? என்னென்ன விஷயங்களுக்கு செலவு செய்ய போகிறீர்கள்? என்ற அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். இந்த ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் உங்களுக்கு முத்ரா கடன் கிடைக்கும்.
0 Comments