இனி தமிழில் மட்டுமே அரசாணை..! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

 மும்மொழி கொள்கை விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

                                                                                 


இந்த நிலையில், அரசு பணியாளர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள் சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், துறை தலைமை அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கருத்துக்கள் தமிழில் இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களிடமிருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments