தமிழ்நாடு அரசின் பெண்கள் உதவி மையத்தில் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

 பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர உடனடி ஆலோசனை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

                                                                          


அந்த வகையில் ஒருங்கிணைத்த சேவை மையம் மூலம் கீழ்காணும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பின் பெயர்:

ஒருங்கிணைத்த சேவை மையம்

காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:

வழக்கு பணியாளர் (Case worker) - 03

சம்பளம்:

Rs.18000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி:

சமுகப்பணியில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) அல்லது மேலாண்மை வளர்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் பொருட்டு அரசு மற்றும் அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஏதேனும் நிர்வாகத்தில் ஒரு வருட முன் அனுபவம் உடையவர்கவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்

வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

பணியமர்த்தப்படும் இடம்:

சென்னை மாவட்டம்

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது email மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

8 வது தளம், சிங்காரவேலர் மாளிகை

ராஜாஜி சாலை

சென்னை - 01

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 28.04.2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 05.05.2025

தேர்வு செய்யும் முறை:

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

கூடுதல் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2025/04/2025042683.pdf

Post a Comment

0 Comments