தமிழக அரசு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை நனவாக்கி வருகிறது.
அந்த வரிசையில், வரும் மார்ச் மாதம் 29-ம் தேதி (சனிக்கிழமை), சென்னை மாவட்டத்தில் ஒரு பிரம்மாண்டமான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை ஒன்றிணைந்து இந்த மாபெரும் முகாமை நடத்தவுள்ளன. இந்த முகாமின் மூலம், தனியார் துறையில் வேலை தேடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு சுமார் 20,000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இது, சென்னையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.
மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கு, எப்போது?
இந்த வேலைவாய்ப்பு முகாம், சென்னையின் முக்கிய இடமான நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி (Government Arts College, Nandanam) வளாகத்தில் வரும் மார்ச் 29-ம் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. காலை முதலே வேலை தேடும் இளைஞர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு தங்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பை பெற்றுச் செல்லலாம்.
இந்த முகாமில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன?
இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதன் மூலம், பல்வேறு கல்வித் தகுதிகளை உடைய இளைஞர்களுக்கு, அதாவது 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல், கணினி இயக்குபவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
அதுமட்டுமின்றி, இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவுகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம், வேலை தேடும் இளைஞர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகளும், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட உள்ளன. எனவே, வேலை தேடுபவர்கள் மட்டுமல்லாது, தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
யாரெல்லாம் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்?
சென்னையில் நடைபெற உள்ள இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். குறிப்பாக, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள், நர்சிங் மற்றும் பார்மசி துறையில் பட்டம் பெற்றவர்கள், பொறியியல் பட்டதாரிகள், கணினி இயக்குவதில் திறமைபெற்றவர்கள் மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்கள் என பல்வேறு திறமை உடையவர்களும் தங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை இந்த முகாமில் பெற முடியும்.
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வது எப்படி?
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள், தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்வது நல்லது. முன்பதிவு செய்வதற்கான கூகுள் படிவத்தின் இணைப்பு: https://forms.gle/BwSbRZjTQkcRFEVf8. இந்த இணைப்பின் மூலம் எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், தமிழ்நாடு அரசின் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளமான https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற வலைத்தளத்தில் உள்ள "candidate Log-இல்" சென்று தங்கள் விவரங்களை பதிவு செய்தும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு அனைவருக்கும் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற விரும்புவோர், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநரை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
வேலை தேடும் இளைஞர்கள், தமிழக அரசு தங்களுக்கு ஏற்படுத்தித் தரும் இந்த அரிய வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தங்களது கனவு வேலையை விரைவில் பெற முடியும். எனவே, தகுதியுள்ள அனைவரும் தவறாமல் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டாம்.
0 Comments