தர்மபுரி மாவட்ட அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு: 135 காலிப்பணியிடங்கள்! முழு விவரங்களுக்கு.

Follow Us

தர்மபுரி மாவட்ட அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு: 135 காலிப்பணியிடங்கள்! முழு விவரங்களுக்கு.

 தமிழ்நாடு அரசு, சத்துணவுத் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தேர்வு கிடையாது.

                                                                            



தர்மபுரி மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த விண்ணப்பதாரர்கள் தகுதி பெறுகின்றனர். தகுதியான விண்ணப்பதாரர்கள் எவ்வித எழுத்துத் தேர்வும் இன்றி, நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள்:


கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தோல்வி அடைந்திருக்கலாம். மேலும், தமிழில் சரளமாக பேசும் திறன் இன்றியமையாதது.


சம்பளம்: இப்பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் ₹3,000 முதல் ₹9,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:


பொது மற்றும் தாழ்த்தப்பட்ட (SC) பிரிவினர்: 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.


பழங்குடியினர்: 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.


விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர்: 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.


தேர்வு முறை:


விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் தகுதியின் அடிப்படையில், தகுதியானவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.


முக்கிய தேதிகள்:


விண்ணப்பம் சமர்ப்பிக்கத் துவங்கும் நாள்: 11.04.2025

விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 30.04.2025, மாலை 5.45 மணி வரை

விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பப் படிவத்தினை https://dharmapuri.nic.in/ எனும் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களின் நகல்களுடன், தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் மட்டுமே நேரடையாகச் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின் நகல்கள்:


பள்ளி மாற்றுச் சான்றிதழ்

SSLC மதிப்பெண் சான்றிதழ்

குடும்ப அட்டை

இருப்பிடச் சான்று

ஆதார் அட்டை

சாதிச் சான்றிதழ்

விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்றிதழ் (பொருந்தினால்)

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (பொருந்தினால்)

குறிப்பு: விண்ணப்பிக்கும் முன்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் தங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.




Post a Comment

0 Comments