உங்களை லட்சாதிபதியாக மாற்றும் எஸ்.பி.ஐ. திட்டம்! முதலீடு செய்வது எப்படி?

 SBI Har Ghar Lakhpati RD scheme: ஸ்டேட் வங்கியின் ஹர் கர் லக்பதி திட்டம் மூலம், குறைந்த முதலீட்டில் லட்சாதிபதி ஆகலாம்.

மாத முதலீட்டை நீங்களே தீர்மானித்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதிக வருமானம் பெறலாம்.

                                                                           


நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஜனவரி 2025 இல் ஹர் கர் லக்பதி என்ற வித்தியாசமான ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் கோடீஸ்வரர்களாக முடியும்.

இது மற்ற ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களிலிருந்து சற்று வித்தியாசமானது. மற்ற ஆர்.டி. திட்டங்களில் மாதத்திற்குக் குறைந்தபட்சம் ரூ.500, ரூ.1000 என இப்படியே முதலீடு செய்துகொண்டே இருந்தால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நமக்கு வருமானம் கிடைக்கும். ஆனால் இந்தத் திட்டத்தில் மாதம் எவ்வளவு டெபாசிட் செய்ய வேண்டும் என்பதை நாமே முடிவு செய்யலாம்.

இந்தத் திட்டத்தின் நோக்கம் ரூ. 1 லட்சம் மற்றும் அதற்கு மேல் வருமானத்தை வழங்குவதாகும். எனவே நாம் கால அளவை அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்ய வேண்டும். இந்த RD திட்டத்தில் தனியாகவோ கூட்டாகவோ சேரலாம். பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் ஒரு கணக்கைத் திறக்கலாம்.

குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். முதிர்வு தேதிக்கு முன்பு பணத்தை எடுத்தால், வட்டி விகிதங்களில் அபராதம் விதிக்கப்படும். உதாரணமாக ரூ. ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக எடுத்துக்கொண்டால் 0.50 சதவீதம், ரூ.5 லட்சத்திற்கு மேல் எடுத்தால், ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும். 

ஒரு லட்சம் ரூபாய் பெற, மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 செலுத்த வேண்டும். இதற்கு 6.75 சதவீத வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு ரூ.2480 மட்டும் செலுத்தினால் போதும். அவர்களுக்கு 7.25 சதவீதம் வட்டி கிடைக்கும். மூன்று ஆண்டுகள் முடிவில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் முதிர்வுத்தொகை ஈட்டலாம்.

நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1810 செலுத்தலாம். மூத்த குடிமக்கள் ரூ.1791 செலுத்தினால் போதும். நான்கு ஆண்டுகள் முதலீட்டுக்குப் பின் லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் சிறிய தொகையைச் சேமித்து லட்சாதிபதி ஆகலாம். நிதி இலக்குகளை அடைய இது ஒரு நல்ல வழியாகும்.

Post a Comment

0 Comments