"தமிழகத்தில் இனி இவர்களும் ஆசிரியர்கள் ஆகலாம்". உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு ‌..!!!

 ஆசிரியர் பணியில் சேர்வது என்பது பெரும்பாலான மாணவர்களுக்கு கனவாக இருக்கும். அதேபோன்று ஆசிரியர் பணியில் சேர்வதற்கு முறையான கல்வித் தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.

                                                                               


அதன்படி ஆசிரியர் பணியில் சேர்வதற்கான முக்கிய கல்வித் தகுதியானது 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு, அதன் பின்னர் 2 ஆண்டுகள் பி.எட் படிப்பு. அதுவே முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆசிரியராக பணிபுரிய வேண்டும் எனில் 1 ஆண்டு பி.எட் படிப்பு படிக்கலாம்.பொதுவாக பி.ஏ, பி. எஸ் சி ஆகிய பட்ட படிப்புகளுடன் பி.எட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதி உடையவர்கள்.


இந்தப் பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் TET தேர்வு மூலம் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த நிலையில் தற்போது இன்ஜினியரிங் பட்டதாரி மாணவர்களும் ஆசிரியர்களாக பணிபுரிய உயர்கல்வி துறை வாய்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.அதன்படி உயர் கல்வித் துறை செயலர் கே. கோபால் புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டதாவது, பி. இ, பி.எட் படிப்புகளை முடித்த மாணவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய முடியும்.

அதாவது இன்ஜினியரிங்கில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு பி.எட் (இயற்பியல் அறிவியல்) முடித்திருந்தால் அந்த மாணவர்கள் அரசு பள்ளிகளில் பட்டதாரி இயற்பியல் ஆசிரியர்களாக பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப்படும். பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடங்கள் கற்றுக் கொடுக்க தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என உயர்கல்வித்துறை செயலர் கே. கோபால் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments