இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 97 தரக் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். RD-2025
பணி: Assistant Quality Control Officers (Grade Ao)
காலியிடங்கள்: 97 (UR-45. LSC-13, ST-6. OBC-24, EWS-9)
சம்பளம்: மாதம் ரூ. 40.000 -.1.40,000
தகுதி: Chemistry, Biochemistry, Pharmacy, Pharmacology, Food Technology, Geochemistry ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றும் 2 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.2.2025 தேதியின்படி பொது மற்றும் இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு சலுகை அளிக்கப்படும்
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.03.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments