தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும், சொத்து வாங்குவோர் மட்டுமே உள்ளே செல்ல புதிய உத்தரவு அமலுக்கு வர உள்ளது.
இதற்காக, 'அனுமதி அட்டை' என்ற புதிய முறை அறிமுகமாக உள்ளது.
பத்திரப்பதிவின்போது சம்பந்தமில்லாத நபர்கள் அலுவலகத்திற்குள் நுழையக்கூடாது என்ற விதி ஏற்கனவே இருந்தாலும், அதை முறையாகக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. சொத்து வாங்குவோர் தங்களுக்கான ஆன்லைன் டோக்கன் விபரங்களை அலுவலக முகப்பில் உள்ள பணியாளரிடம் காட்டி, அனுமதி அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த அட்டை இல்லாமல் பதிவாளர் அலுவலகத்துக்குள் நுழைய முடியாது.
சென்னை அடையாறு சார் பதிவாளர் அலுவலகத்தில் முதன்முதலாக அறிமுகமாகிய இந்த முறை, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதனால், அனைத்து அலுவலகங்களிலும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பத்திரப்பதிவின்போது ஏற்படும் குழப்பங்கள் குறைந்து, பணிநிலைய பாதுகாப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments