பெண்களே..உங்களுக்கு சுய தொழில் தொடங்க ஆசையா?.. ரூ. 3 லட்சம் வரை நிதி உதவி வழங்கும் சூப்பர் திட்டம் இதோ..!!

 அரசு பொருளாதார ரீதியாக நலிவடைந்த பெண் தொழில் முனைவோருக்கு, பல்வேறு நிதி உதவி வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

                                                                                       


அந்தவகையில், தற்போது மத்திய அரசின் "உத்யோகினி யோஜனா திட்டம்" குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை நிதி உதவி, கடனாக வழங்கப்படுகிறது. மேலும், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது.

                                                                                 

மேலும், 18 முதல் 55 வயதிற்குட்பட்ட பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக, ரேஷன் கார்டு, சாதி சான்றிதழ், தொழில் தொடங்குவதற்கான சான்று, வருமான சான்றிதழ் ஆகியவை இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களாகும். மேலும், இத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள வங்கிகளுக்கு சென்று, முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments