தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
சமையல் உதவியாளர்
காலியிடங்கள்: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 8997 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.
சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் Rs.3,000 - 9,000/- ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். இந்த பணியில் சேரலாம்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ஏதுமில்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டிடப்பட்டுள்ளது . விண்ணப்ப சாளரம் இன்னும் சில நாட்களில் வெளியிடப்பட இருக்கிறது

0 Comments