பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் பெண்களுக்கு உதவும் விதமாக பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது . தற்போது பிமா சகி யோஜனா என்ற புதிய திட்டம்து மத்திய அரசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் ஏழாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தில் 18 வயது முதல் மற்றும் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உடையவர்கள் https://licindia.in/hi/test2 என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் வயது சான்றிதழ், முகவரி சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிப்பது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments