EPFO: 7 கோடி EPF உறுப்பினர்களுக்கு வரும் ஹேப்பி நியூஸ்! இன்று முக்கிய அப்டேட்!

Follow Us

EPFO: 7 கோடி EPF உறுப்பினர்களுக்கு வரும் ஹேப்பி நியூஸ்! இன்று முக்கிய அப்டேட்!

 பணிபுரியும் ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு EPF பங்களிப்புகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில் EPF வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாக உள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதியான இன்று நடைபெற உள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் நடப்பு நிதியாண்டுக்கான வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.


                                                            



மத்திய அறங்காவலர் குழு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சில மாற்றங்களை கொண்டு வருவதற்காக 1952-ஆம் ஆண்டின் பிரிவு 5A-யின் கீழ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பாகும். இதில் அரசு அதிகாரிகள், தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்தின் தலைவர்கள் இருப்பார்கள்.

EPFO அமைப்பு கடந்த ஆண்டிற்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக நிர்ணயித்தது. 

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த வட்டி விகிதம் இதுவாகும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான வட்டி விகிதம் குறித்து அறிவிப்புகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் வாய்ப்புள்ளது. 

உங்கள் இபிஎஃப் கணக்கிற்கு எவ்வளவு வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள 4 வழிகளைப் பயன்படுத்தலாம். ஆன்லைன், எஸ்எம்எஸ், மிஸ்டுகால் மற்றும் உமங் ஆப் ஆகியவற்றை பயன்படுத்தித் தெரிந்து கொள்ளலாம். வட்டியை தெரிந்து கொள்ள பிஎப் பேலன்ஸை சரிபார்த்தால் தெரிந்து விடும்.

 UMANG அப்ளிகேஷன் மூலம் PF பேலன்ஸ்-ஐ தெரிந்துகொள்வது எப்படி?:

 ஸ்டெப் 1: முதலில் UMANG அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும்.

ஸ்டெப் 2: EPFO என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். ஸ்டெப் 3: "Employee-Centric Services" என்பதைக் கிளிக் செய்யவும். ஸ்டெப் 4: உங்கள் UAN நம்பர் மற்றும் OTP-ஐ வழங்கவும்.

தற்போது நீங்கள் உங்கள் PF பேலன்ஸ் மற்றும் பிற விவரங்களைச் சரிபார்க்கலாம்.

SMS மூலம் PF பேலன்ஸ்-ஐ பெறுவது எப்படி?: PF பேலன்ஸ்-ஐ SMS மூலம் தெரிந்துகொள்ள கண்டிப்பாக உங்கள் UAN நம்பர் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

இந்த நம்பரை எப்படி ஆக்டிவேட் செய்வது என்று வேறு ஒரு பதிவில் கொடுத்துள்ளோம். அதற்கு EPFOHO UAN என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும். மிஸ்டு கால் மூலம் PF பேலன்ஸ்-ஐ எப்படி சரிபார்ப்பது?: மிஸ்டு கால் மூலம் பிஎஃப் பேலன்ஸ்-ஐ சரிபார்க்கும் வசதியையும் EPFO அமைப்பு வழங்கியுள்ளது. இதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். சில நொடிகளில் உங்கள் மொபைலுக்கு PF பேலன்ஸ் அனுப்பப்படும்.


Post a Comment

0 Comments