நீங்கள் BC அல்லது MBC-யா? சிறு தொழில் தொடங்க ரூ 15 லட்சம் வரை கடன்! விண்ணப்பிப்பது எப்படி?

Follow Us

நீங்கள் BC அல்லது MBC-யா? சிறு தொழில் தொடங்க ரூ 15 லட்சம் வரை கடன்! விண்ணப்பிப்பது எப்படி?

 சென்னை: நீங்கள் பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோராக இருந்தால் உங்களுக்கு தொழில் தொடங்க அதிகபட்ச கடன் தொகையாக ரூ 15 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மத்திய நிதி பங்கீட்டுடன் ரூ 15 லட்சம் வரை தனி நபர் மற்றும் குழுக்கடன் திட்டம் சார்பில் வழங்கப்படுகிறது.



அரசு சிறு தொழில் / வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15.00 லட்சம் வரை வழங்குகிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்கான சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள், வியாபாரம் ஆகியவற்றைச் செய்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் நிதியுதவி வழங்கி வருகிறது. 

கடன் பங்குத் தொகை விவரம்: ✔️ தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு - 85% ✔️ தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு - 10% ✔️ பயனாளியின் பங்கு - 05% ஆண்டு வட்டி விகிதம் • ரூ.1.25 லட்சம் வரை - 7% வட்டி விகிதம்

• ரூ.1.25 லட்சம் மேல் ரூ.5.00 லட்சம் வரை – 8% வட்டி விகிதம் • ரூ.5.00 லட்சம் மேல் ரூ.15.00 லட்சம் வரை - 8% வட்டி விகிதம் திரும்ப செலுத்தும் காலம் : 3- 5 ஆண்டுகள் தகுதிகள் • பயனாளி மாநில (அல்லது) மத்திய பட்டியலில் உள்ளபடி பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும். • குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.3,00,000/-க்கும் மிகாமல் இருத்தல் வேண்டும்.

• பயனடைவோரின் வயது வரம்பு 18 ஆண்டுகளுக்கு மேல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 • ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை கடன் விண்ணப்பப் படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும்: 

 சென்னையில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகம்.

 • மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் மண்டல மேலாளர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்.

 • கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.

 • அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் / நகர கூட்டுறவு வங்கிகள் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள். 

தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து கீழ்க்காணும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர் / மண்டல மேலாளர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் / கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். 

1. சாதி, வருமான மற்றும் பிறப்பிடச் சான்றிதழ். 2. முன்னணியில் உள்ள நிறுவனமொன்றிலிருந்து விலைப்புள்ளி. 3. திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும் ). 4. குடும்ப அட்டை (Ration card). 5. ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்களுக்கு கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்). 6. நிதி உதவி பெறுவதற்கான ஆவணங்கள் / வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்கள். 7. ஆதார் அட்டை (ம) கைப்பேசி எண். 

மேலும் இந்த திட்டம் குறித்த விவரங்களுக்கு 👉 https://tabcedco.tn.gov.in/WEB/EN/ இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது


Post a Comment

0 Comments