விழுப்புரம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் -2025


மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் -2025

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்/இளைஞர்கள் அதிகளவு பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் மூன்றாவது வெள்ளிக்கிழமை அலுவலக வளாகத்திலேயே சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமும், 2024-2025ம் நிதியாண்டில் இரண்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும் நடத்தப்பட உள்ளது.



 அந்த வகையில் தற்போது, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்ககம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16.02.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த 200ற்கும் மேற்பட்ட முன்னனி தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர். நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியினை உடையவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04146-226417), 9499055906 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

எனவே. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 16.022025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.S.ஷேக் அப்துல் ரகுமான், இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்கள்


Post a Comment

0 Comments